சுவையான பச்சை பீன்ஸ் மற்றும் பாதாம் ரெசிபி !





சுவையான பச்சை பீன்ஸ் மற்றும் பாதாம் ரெசிபி !

0

பீன்ஸில் இரும்பு, கால்சியம், மக்னீசியம், மாங்கனிசு மற்றும் பொட்டாசியம் நிறைந்துள்ளது.

பச்சை பீன்ஸ் மற்றும் பாதாம்

பீன்ஸ் சாப்பிட்டு வந்தால் அதில் உள்ள ஃப்ளேவோனாய்டுகள் புற்றுநோயை உண்டாக்கும் செல்களின் வளர்ச்சியைத் தடுத்து புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பைத் தடுக்கும்.

இன்ஸ்டன்ட் இட்லி மாவு யூஸ் பண்றீங்களா?

தேவையான பொருட்கள்

10-12 பச்சை பீன்ஸ்

1 பெரிய வெங்காயம், நறுக்கியது

1 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய்

1 டீ ஸ்பூன் ஆப்பிள் சிடார் வினிகர்

உப்பு சுவைக்கேற்ப

மிளகு சுவைக்கேற்ப

3 டேபிள் ஸ்பூன் பார்சிலி நறுக்கியது

2 டேபிள் ஸ்பூன் உடைத்த பாதாம் பருப்புகள்

செய்முறை

ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் பாதாம் பருப்பு சேர்த்து பொன் மொறுவலாக வறுக்கவும். இன்னொரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய், ஊற்றி அதிக தீயில் உருக வைக்கவும்.

இப்பொழுது அதில் நறுக்கிய வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும். மற்றொரு பாத்திரத்தில் பச்சை பீன்ஸை போட்டு தண்ணீர் விட்டு 3-4 நிமிடங்கள் கொதிக்க விடுங்கள்.

இப்பொழுது தண்ணீரை வடிகட்டி விட்டு அதை வதக்கிய வெங்காயத்துடன் சேர்க்கவும். அதனுடன் நறுக்கிய பார்சிலி மற்றும் ஆப்பிள் சிடார் வினிகர் சேருங்கள் உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்து கிளறவும்.

வாழ இலை குளியல் உள்ள சிறப்புகள் !

3-4 நிமிடங்கள் சூடு படுத்தவும். இப்பொழுது வறுத்த பாதாம் பருப்புகளை அதன் மேல் தூவி அழகாக அலங்கரித்து சாப்பிடுங்கள். சுவையான ஆரோக்கியமான ரெசிபி ரெடி.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)