மஸ்கட் திராட்சையில் அப்படி என்ன இருக்கிறது தெரியுமா?





மஸ்கட் திராட்சையில் அப்படி என்ன இருக்கிறது தெரியுமா?

0

மஸ்கட் திராட்சை அதிகளவில் வட அமெரிக்காவில் விளைகிறது. அட்லாண்டிக் கரையோர நாடுகளில் இது அதிகளவு பயிரிடப்படுகிறது. அமெரிக்காவில் வசிப்பவர்கள் இதை பயிரிட்டு உலர வைத்து பயன்படுத்தினர். 

மஸ்கட் திராட்சையில் அப்படி என்ன இருக்கிறது தெரியுமா?

அதே மாதிரி ஆரம்பகால ஐரோப்பிய குடியேறியவர்கள் மிசிசிப்பி மாநில பல்கலைக்கழகத்திடம் சி. பாட்ரிக் ஹெக்வூட் எழுதிய ஒரு காகிதத்தின் படி, பெரிய, தடித்த தோல்களால் செய்யப்பட்ட திராட்சை பழங்கள் வொயின் தயாரிக்க பயன்படுத்தப்பட்டது. 

மஸ்கட் திராட்சை சாப்பிடுவதற்கு சுவையாக இருப்பதோடு நமது உடல் நலத்திற்கும் நல்லது. இதில் ஏராளமான ஊட்டச்சத்துகள் அடங்கியுள்ளன. மஸ்கட் திராட்சை சாப்பிடுவதால் நமக்கு என்ன பலன், வாங்க தெரிஞ்சுக்கலாம்

மஸ்கட் திராட்சை

மஸ்கட் திராட்சை

அமெரிக்காவில் இந்த மஸ்கட் திராட்சை பிராந்தி தயாரிக்க பயிரிடப்படுகிறது. மேலும் திராட்சை ஜாம், ஜெல்லி தயாரிக்கவும் உதவுகிறது. இதில் பச்சை மற்றும் பிரான்ஸ் நிற பழ வகைகளும் காணப்படுகிறது.

புளோரிடா பல்கலைக் கழகம், கெய்ன்ஸ்வில்லி, ஃப்ளோரிடாவில் இருந்து லீவி குய்வின் ஆய்வின் படி, மஸ்கட் திராட்சையின் தடிமனான தோலில் நிறைய பாலிபினோல்கள் உள்ளன.

சன்னி லியோன் வாழ்க்கை

இது சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்ஸிடன்ட்களாக செயல்படுகிறது. இதனால் உடல் மெட்ட பாலிச மேம்பாட்டிற்கு, இதய நோய்களுக்கு, நாள்பட்ட நோய்கள் மற்றும் ஒட்டு மொத்த உடல் நல ஆரோக்கியத்திற்கு பயன்படுகிறது.

ஊட்டச்சத்து அளவுகள்

4 அவுன்ஸ் மஸ்கட் திராட்சையில் 4.5 கிராம் நார்ச்சத்து

15 கிராம் கார்போஹைட்ரேட்

2.3 மில்லி கிராம் மாங்கனீஸ் (பெரியவர்களுக்கு தேவையான அளவு)

23% தினசரி விட்டமின் சி அளவு

1 கிராம் புரோட்டீன்

65 கலோரிகள்

உள்ளது என்று அமெரிக்க ஊட்டச்சத்து விவரங்கள் கூறுகின்றன.

சீரண சக்தியை அதிகரித்தல்

சீரண சக்தியை அதிகரித்தல்

நார்ச்சத்துகள் அதிகமாக உள்ள பழம் என்றால் மஸ்கட் திராட்சை தான். நீரில் கரையாத நார்ச்சத்துகள் அதன் தோலிலும் விதைகளிலும் காணப்படுகிறது. 

மலச்சிக்கல் மற்றும் சீரண சக்தியை அதிகரித்தல் போன்ற செயல்களை செய்கிறது. மஸ்கட் திராட்சையின் தோல் சாப்பிடுவதற்கு தடினமாக இருந்தாலும் தோலுடன் சாப்பிடுவது நல்லது.

உடல் எடை குறைப்பு

உடல் எடை குறைப்பு

அதிகப்படியான எடை மேலும் மேலும் அதிகரிக்க தொடங்கும் போது அவை உடலிலும் பல நோய்களை உண்டாக்க தொடங்குகிறது.

இரத்த அழுத்தம், நீரிழிவு. தைராய்டு, ஹார்மோன் சுரப்பில் மாற்றம், மன அழுத்தம் என்று பிரச்சனைகளை வரிசை கட்டி வரவைக்கிறது. 

இதில் அதிகளவு நார்ச்சத்து மற்றும் தண்ணீர் சத்து இருப்பதால் உடல் எடை குறைக்க சிறந்தது. மேலும் இதில் சர்க்கரை, கொழுப்பு போன்ற பொருட்கள் இல்லை என்பதால் இதை நீங்கள் ஸ்நாக்ஸ் மாதிரி கூட சாப்பிட்டு வரலாம்.

ஆன்டி ஆக்ஸிடன்ட்கள்

ஆன்டி ஆக்ஸிடன்ட்கள்

நம் உடலில் இருந்தும், சுற்றுப்புறச் சூழல்களிலிருந்தும் Oxidants என்ற நச்சுக்குப்பைகள் உருவாகி நம் செல்களைத் தாக்குகின்றன. 

Free radicals என்ற பெயராலும் குறிப்பிடப்படும் இந்த நச்சுக்கள் முதுமைத் தன்மையை ஏற்படுத்துவதிலும், இதய நோய்களை வரவழைப்பதிலும், புற்றுநோய்களை உண்டாக்குவதிலும் பெரும்பங்கு வகிக்கிறது. 

இதில் உள்ள முக்கியமான ஆன்டி ஆக்ஸிடன்ட் ரெஸ்வரட்டோல் இது நிறைய நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. 

புற்றுநோய், அல்சீமர் நோய், இதய நோய்கள், உயர் ரத்த அழுத்தம், க்ரோன் நோய், பர்கின்சர் நோய் போன்ற நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. இது பெருங்குடல் புற்று நோய் வளர்ச்சியை தடுக்கிறது.

இதய நோய்கள் பராமரிப்பு

இதய நோய்கள் பராமரிப்பு

இதயத் தமனிகள் மெல்லியதாதல் அல்லது அவற்றில் தடை ஏற்படுவதே இதய நோய் எனப்படுகிறது. பொதுவாக இது தமனித் தடிப்பால் உண்டாகிறது. தமனியின் உட்சுவரில் கொழுப்பு படிவதால் இத்தடிப்பு ஏற்படுகிறது. 

இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்னான ரெஸ்வரட்டோல் கெட்ட கொழுப்புகளை (எல்டிஎல்) கரைக்கிறது. செல்களில் ஏற்படும் அழுத்தம், டயாபெட்டிக் அறிகுறிகள், இதய நோய்கள், பக்கவாதம் போன்றவற்றை சரி செய்கிறது.

மஸ்கட் வொயின் தயாரிப்பது எப்படி?

முதலில் ஒரு கண்ணாடி ஜாரை எடுத்து நன்றாக கழுவி அந்த ஜாரில் 6 கப் சர்க்கரை, 3 பங்கு சுத்தமான தண்ணீர் சேர்த்து கொள்ளுங்கள்.

மஸ்கட் வொயின் தயாரிப்பது எப்படி?

4 கப் மஸ்கட் திராட்சை சாறு எடுத்து அதில் சர்க்கரை நீரை சேர்த்து கொள்ளுங்கள். அதன் மேல் உலர்ந்த ஈஸ்ட்டை தூவி விடுங்கள். கலக்க வேண்டாம்.

அடுத்த நாள் அதை நன்றாக கலக்கி விடுங்கள். இப்படியே ஒரு வாரத்திற்கு செய்து வாருங்கள்.

அடுத்து இந்த தண்ணீரை வடிகட்டி மற்றொரு காற்று புகாத ஜாரில் அடைத்து கொள்ளுங்கள். அந்த ஜாரின் மேல் பகுதியில் தண்ணீர் ஊற்றி கொள்ளுங்கள். 6 வாரங்கள் வரை அப்படியே வைத்துக் இருங்கள்.

பிறகு அதை மறுபடியும் மற்றொரு காற்று புகாத ஜாரில் வடிகட்டி வைத்து பயன்படுத்துங்கள். குடிப்பதற்கு 3 நாட்களுக்கு முன்னாடி சூரிய ஒளி படாத இடத்தில் வைத்து குளிர வைத்து பயன்படுத்துங்கள்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)