நரை முடி கருமையாக மீசையில் உள்ள இளநரை போக்க இதை பயன்படுத்துங்கள் !





நரை முடி கருமையாக மீசையில் உள்ள இளநரை போக்க இதை பயன்படுத்துங்கள் !

நமது அழகில் மிகவும் முக்கிய பங்கு வகிப்பது என்றால் அது கூந்தல் அழகு தான். அதிலும் கருகருவென அலைபாயும் கூந்தல் என்றால் போதும் உங்கள் அழகை பலமடங்கு கூட்டியே காட்டும். 

நரை முடி கருமையாக மீசையில் உள்ள இளநரை போக்க
அழகை மட்டுமா என்ன உங்கள் இளமையையும் சேர்த்து தான். ஆனால் இன்றைய சந்ததியினர் பலருக்கு இப்போதெல்லாம், இளம் வயதிலேயே நரைமுடி வந்து விடுகிறது.

அப்படியானால் இளம் வயதிலேயே உங்கள் கூந்தல் நரைத்து விட்டால் என்ன நடக்கும். உங்கள் இளமையும் வயதான தோற்றம் பெற்று விடும் அல்லவா. 

இந்த இளநரையை நீங்கள் என்ன தான் மறைக்க முயன்றாலும் ஒரு நிரந்தர தீர்வு கிடைக்காமல் நேரம் வீணானது தான் மிச்சமாக இருக்கும். 

குடல் கழிவுகளை சுலபமாக வெளியேற்ற இந்த ஜூஸை குடிங்க !

இதற்கு காரணம் இதற்கு சுற்றுச்சூழல், உணவுப் பழக்கவழக்கங்கள், மனஅழுத்தம், பரம்பரை போன்றவை முக்கிய காரணங்களாக இருந்தாலும், முடியை சரியாக பராமரிக்காததும் காரணமாக கருதப்படுகிறது.

அதுமட்டுமின்றி பலரும் நரைமுடி மறைய பல்வேறு ஹேர் டைகளை வாங்கி பயன்படுத்துகின்றனர். ஆனால் அதனால் வெள்ளை முடி தற்காலிகமாக மறையுமே தவிர, நிரந்தரமாக மறையாது. 

செயற்கை கலரிங் போன்றவை பக்க விளைவுகளை ஏற்படுத்த கூட வாய்ப்புள்ளது. மேலும் நரைமுடி மறைய கண்ட கண்ட பொருட்களை வாங்கி தடவுவதால், பல்வேறு அலர்ஜிகளும் ஏற்படுகின்றன. 

இதனால் முடியும் அதன் தன்மையை இழந்து விடுகிறது. இதிலிருந்து எளிதில் விடுபட இயற்கை முறைகள் பல உள்ளன. 

பட்டர் மில்க் ரெசிபி

பட்டர் மில்க் ரெசிபி

இந்த பட்டர் என்ற பெயர் பால் பொருட்களில் இது குறைந்த கொழுப்பு சத்து கொண்டது என்பதை காட்டுகிறது. 1 கப் பட்டர் மில்க்கில் 2.2 கிராம் கொழுப்பு, 99 கலோரிகள் அடங்கியுள்ளன. 

1 கப் முழுப்பாலில் 8.9 கிராம் கொழுப்பு, 157 கலோரிகள். இது கெமோதெரபி, ரேடியேஷன் தெரபி போன்ற புற்று நோய் சிகிச்சைக்கும் உதவுகிறது. 

பட்டர்மில்க், கறிவேப்பிலை இரண்டும் இளநரையை போக்க பெரிதும் பயன்படுகிறது. எண்ணெய் பசை கூந்தலையுடையவர்களுக்கு இந்த ரெசிபி சிறந்தது.

தேவையான பொருட்கள்

பட்டர் மில்க் - 1/2 கப்

கறிவேப்பிலை ஜூஸ் - 1/2 கப்

செய்முறை

பட்டரை வீட்டில் தயாரிக்க யோகார்ட்டுடன் வெதுவெதுப்பான தண்ணீர் கலந்து பட்டரை மட்டும் தனியாக எடுக்கவும். பின் கறிவேப்பிலையை நன்றாக அரைத்து அதன் ஜூஸை மட்டும் வடிகட்டி அதனுடன் பட்டர் மில்க்கை கலக்கவும். 

வயிற்றுப்புண்ணை குணப்படுத்தும் ஆட்டுக்குடல் குழம்பு செய்வது எப்படி?

குறைந்த தீயில் இதை 5 நிமிடங்கள் சூடுபடுத்த வேண்டும். பின்னர் வெதுவெதுப்பாக ஆற விட்டு இதை தலையில் மற்றும் கூந்தலில் தடவ வேண்டும். 

1/2 மணி நேரம் அப்படியே வைத்து இருக்க வேண்டும். வெதுவெதுப்பான நீரை கொண்டு கூந்தலை அலசவும். இது கூந்தல் உதிர்விற்கும் மிகச் சிறந்த டானிக் ஆகும்.

கறிவேப்பிலை டானிக்

கறிவேப்பிலை டானிக்

கறிவேப்பிலை என்பது சமையலில் வாசனைக்காகப் பயன்படுத்தப்படும் ஒருவகைகறிவேப்பிலை இலையாகும். “கறிவேம்பு இலை” என்ற சொல் தான் பிற்காலத்தில் மருவிக் கறிவேப்பிலை என்று ஆனது. 

நம்முடைய பாரம்பரியமான சமையல் முறைகளில் கறிவேப்பிலை தவறாமல் இடம்பெறும். கறிவேப்பிலை உங்கள் சமையலை மட்டும் மணமாக்க போவதில்லை. உங்கள் கூந்தலையும் நிறமாக்க போகிறது. 

உண்மையை சொல்ல போனால் இது இயற்கை கொடுத்த வரம். இதை உங்கள் உணவுகளில் தொடர்ச்சியாக சேர்த்து வந்தாலே போதும் உங்கள் கூந்தல் கருகருவென அலைபாயும். 

அப்படியொரு சிறந்த கூந்தல் டானிக்கையை தான் இப்பொழுது பார்க்க போறோம். இதை தயாரித்து ஸ்டோர் செய்து கூட நீங்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.

எப்படி தயாரிப்பது?

தேங்காய் எண்ணெய் - 100 மில்லி லிட்டர்

கறிவேப்பிலை - ஒரு கைப்பிடியளவு (தேவைக்கேற்ப)

செய்முறை

கறிவேப்பிலையை தேங்காய் எண்ணெய்யுடன் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். உங்கள் தேங்காய் எண்ணெய் உறைந்து இருந்தால் முதலில் அதை உருக்கி விட்டு பிறகு கறிவேப்பிலை சேர்த்து சூடுபடுத்தவும்

கறிவேப்பிலை கருப்பு கலரில் மாறியதும் அடுப்பை அணைத்து விடவும். இந்த எண்ணெய்யை வடிகட்டி ஒரு காற்று புகாத பாட்டிலில் அடைத்து கொள்ளவும்.

கூந்தலில் எப்படி தேய்ப்பது?

இந்த எண்ணெய்யை தினமும் தூங்குவதற்கு முன் கூந்தலில் தேய்த்து நன்றாக மயிர்க்கால்களில் படும் படி 15-20 நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும். 

உடல் எடையை குறைக்கும் போது உடலில் ஏற்படும் மாற்றங்கள்?

காலையில் எழுந்ததும் கூந்தலை அலசி விடுங்கள். இதை 3 மாதத்திற்கு செய்து வந்தால் நல்ல மாற்றத்தை காணலாம்.

பிரிட்டிஷ் புகழ்பெற்ற நடிகையான அன்னா ப்ரைல் தினமும் கறிவேப்பிலை டீ குடித்து வந்துள்ளார். அவரின் கூந்தலுக்கு இயற்கையான நிறம் கிடைத்ததாக தன் அனுபவத்தை நம்மிடம் கூறியுள்ளார். 

அவர் கறிவேப்பிலை இலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து அந்த தண்ணீரை குடித்து வந்ததில் தனது இளநரை மறைந்துள்ளது என்று கூறுகிறார்.

நெல்லிக்காய் டோனர்

நெல்லிக்காய் டோனர்

இந்த மாதிரியான கூந்தலை நீங்கள் பெற்று இருந்தால் எண்ணெய்க்கு பதிலாக நெல்லிக்காய் தண்ணீர் உபயோகிக்கலாம்.

தேவையான பொருட்கள்

1 கப் தண்ணீர்

1டீ ஸ்பூன் நெல்லிக்காய் பொடி

செய்முறை

நெல்லிக்காய் பொடியை தண்ணீரில் சேர்க்க வேண்டும். தண்ணீர் நன்றாக கொதித்து பாதியாக வற்றும் வரை கொதிக்க விடவும். 3 டீ ஸ்பூன் நெல்லிக்காய் தண்ணீராவது தேவை. இதனுடன் 3 டீ ஸ்பூன் லெமன் ஜூஸ் சேர்க்கவும்

பயன்படுத்தும் முறை

இதனுடன் போதுமான அளவு தண்ணீர் சேர்த்து உங்கள் முடிக்கு பயன்படுத்தி கொள்ளலாம். இந்த தண்ணீரைக் கொண்டு கூந்தலை அலசுங்கள். 

இந்த இந்திய நெல்லிக்காயின் அளவு 1 அங்குலமாகும். இதை நீங்கள் கொதிக்க வைத்தாலோ, ஜாம் வடிவிலோ அல்லது ஊறுகாய் வடிவிலோ இப்படி எப்படி பயன்படுத்தினாலும் இதன் சத்து மாறாது.

நெல்லிக்காய் பொடி

நெல்லிக்காய் பொடி

தினம் ஒரு நெல்லிக் கனி சாப்பிட்டால் போதும், ஆப்பிளுக்கு நிகரான சத்துக்களைக் கொண்டது. நெல்லிக்காய்; ஒரு  நெல்லிக்காய் மூன்று ஆப்பிள்களுக்குச் சமம். நெல்லிக்காய் ஆயுர்வேதத்தில் பயன்படுத்தப்படும் முக்கிய பொருள். 

இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்களான வைட்டமின் சி சத்து கூந்தலை பராமரிக்க பெரிதும் பயன்படுகிறது. இவை இளநரையை தடுத்து முடிகள் அடர்த்தியாகவும் நன்றாக வளரவும் உதவுகிறது.

தேவையான பொருட்கள்

நெல்லிக்காய் பொடி - 2 டேபிள் ஸ்பூன் 

வெந்தய பொடி - 1 டீ ஸ்பூன்

தேங்காய் எண்ணெய் - 1 கப்

செய்முறை

நெல்லிக்காயை நறுக்கி நிழலில் காய வைத்து காய்ந்ததும் நன்றாக பொடியாக அரைத்து கொள்ளவும். நெல்லிக்காய் பொடி, தேங்காய் எண்ணெய், வெந்தயம் இவற்றை ஒரு கடாயில் சேர்க்கவும். 

பைல்ஸ் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வெக்க? இதை செய்தால் போதும் !

மிதமான தீயில் வைத்து சூடுபடுத்தவும். எண்ணெய் பழுப்பு நிறத்தில் மாறியதும் அடுப்பை அணைத்து விடவும். ஆற விடவும். எண்ணெய்யை வடிகட்டி ஒரு பாட்டிலில் அடைத்து கொள்ளவும்

கூந்தலில் எப்படி தேய்ப்பது?

இரவு நேரத்தில் இந்த நெல்லிக்காய் எண்ணெய்யை தலை மற்றும் கூந்தலில் மசாஜ் செய்து தடவி வந்தால் இளநரையை தடுக்கலாம். காலையில் எழுந்ததும் அலச வேண்டும்.

பீர்க்கங்காய் டானிக்

பீர்க்கங்காய் டானிக்

பீர்க்கங்காய் வெள்ளரி இனத்தை சேர்ந்த ஒரு காய்கறியாகும். பிஞ்சு பீர்க்கங்காயை விட முற்றிய பீர்க்கங்காயே சமையலுக்கு சிறந்தது. 

பீர்க்கங்காயில் நார்ச்சத்து, வைட்டமின்கள் ‘ஏ’, ‘பி’, ‘சி’, மற்றும் தாது உப்புகள் போன்றவை இருப்பதால் நீரிழிவு நோயாளிகள் பீர்க்கங்காயைச் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். 

இது சத்துணவாகவும் டானிக் மருந்து போலவும் செயல்பட்டு உடல் நலத்தைக் பாதுகாக்கும். இதுவும் இளநரைகளின் வேர்ப் பகுதியின் நிறத்தை மாற்றி இளநரையை போக்குகிறது. இதற்கு இந்த டானிக்கை நாம் தயாரிக்க வேண்டும்.

தேவையான பொருட்கள்

உலர்ந்த பீர்க்கங்காய் - 1/2 கப்

தேங்காய் எண்ணெய் - 1 கப்

செய்முறை

பீர்க்கங்காயை துண்டுகளாக நறுக்கி நிழலிலே காய வைத்து உலர்த்த பின் 3-4 நாட்கள் தேங்காய் எண்ணெய்யில் ஊற வைக்கவும். 

இப்பொழுது தேங்காய் எண்ணெய்யை பீர்க்கங்காயுடன் கொதிக்க விடவும். எண்ணெய் கருப்பாக, மாறும் வரை குறைந்த தீயில் வைத்து சூடுபடுத்தவும். வடிகட்டி ஸ்டோர் செய்து கொள்ளவும்

பயன்படுத்தும் முறை

இதை வாரத்திற்கு இரண்டு முறை என கூந்தல் மற்றும் தலையில் தேய்த்து மசாஜ் செய்து வரவும்.

அடிக்கடி கூந்தலுக்கு கெமிக்கல் பொருட்கள், கெமிக்கல் ஹேர் கேர் பொருட்கள் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.

Tags: