வெங்காயம் இல்லன்னா என்ன இத வச்சு சமைக்கலாம் !





வெங்காயம் இல்லன்னா என்ன இத வச்சு சமைக்கலாம் !

0

உலகில் உள்ள மக்கள் அனைவராலும் பயன்படுத்தப்படும் ஒரு உணவுப்பொருள் வெங்காயம். வெங்காயம் என்பது அல்லியம் குடும்பத்தைச் சேர்ந்தது. பூண்டு, லீக், ஷால்லோட் போன்றவை இதே குடும்பத்தைச் சேர்ந்த உணவுப் பொருட்களாகும்.

வெங்காயம் இல்லன்னா என்ன இத வச்சு சமைக்கலாம் !
வெங்காயம் பொதுவாக சிவப்பு, மஞ்சள் மற்றும் இனிப்பு என்று பல்வேறு வகைகளில் கிடைக்கின்றன. இவை அனைத்திலுமே காய்ந்த தோல் பகுதிக்கு அடியில் மொறுமொறுப்பான சதைப் பகுதி தென்படுகிறது.

வெங்காயத்தில் புரத சத்துக்கள், தாது உப்புகள், வைட்டமின்கள் உள்ளன. வெங்காயத்தின் காரத்தன்மைக்கு காரணம் அதில் உள்ள அலைல் புரோப்பைல் டை சல்பைடு ஆகும். 

புருவத்தில் உள்ள வெள்ளை முடியை கருமை ஆக்குவது எப்படி?

இதுவே வெங்காயத்தின் நெடிக்கும், வெங்காயத்தை நறுக்கும் போது நமது கண்களில் வரும் கண்ணீருக்கும்  காரணம் ஆகும்.

வெங்காயத்தில் சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் என்று இரண்டு வகை இருக்கிறது. ஜலதோஷம் வந்தால் ஒரு சின்ன வெங்காயத்தை  மென்னு தின்று, வெந்நீர் குடித்தால் ஜலதோஷம் குறையும், தும்மல், நீர்க்கடுப்பு குணமாகும். 

இந்த வெங்காயத்தின் சுவை பிடிக்காதவர்களும் நம்மிடையே உண்டு. மேலும் சிலருக்கு வெங்காயம் ஒவ்வாமையை ஏற்படுத்தும். வெங்காயத்தில் இருக்கும் கடுமையான வாசனை, அந்தச் செடியில் இயற்கையாக இருக்கும் சல்பர் கூறுகளில் இருந்து வெளிப்படும். 

இந்தக் காரத்தன்மையின் காரணமாக வெங்காயம், சூப், ஸ்டூ, வறுவல், பொரியல் என்று பல உணவு வகைகளில் பல்வேறு காய்கறிகள் மற்றும் இறைச்சியுடன் சேர்த்து பயன்படுத்தப்படுகின்றன.

சிறந்த மாற்று உணவுகள்

சிறந்த மாற்று உணவுகள்

வெங்காயத்தை பொடியாக நறுக்கி நல்லெண்ணெய் விட்டு வதக்கி, தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ரத்தக்கொதிப்பு குறைந்து, இதயம் பலமாகும். 

வெங்காயத்தை சில உணவுகளில் சேர்க்கும் போது, அதன் காரத்தன்மை காரணமாக அந்த உணவு வகையில் ஒரு பெரிய மாற்றம் ஏற்படுகிறது. அதனை விரும்பாத சிலர், வெங்காயத்திற்கு மாற்றாக வேறு சில பொருட்களை பயன்படுத்த எண்ணுகின்றனர். 

வெள்ளை முடியை குறைக்கும் முட்டை எண்ணெய் தயாரிக்க தெரியுமா?

வெங்காயத்தில் உள்ள சல்பர், செரிமான எரிச்சல் மற்றும் ஒவ்வாமையை உண்டாக்கும் பண்பு போன்றவற்றை வலிமையாகக் கொண்டுள்ளது. 

மேலும் வெங்காயத்தை நறுக்கும் போதும், சமைக்கும் போதும், அதில் இருந்து வெளிப்படும் எரிச்சலூட்டும் கூறுகள் கண்களை எரிச்சலடையச் செய்து, கண்ணீரை வர வழைக்கும். 

இருப்பினும், அல்லியம் குடும்பத்தில் உள்ள இதர பொருட்கள் அல்லது மற்ற காய்கறிகளை வெங்காயத்திற்கு மாற்றாக பயன்படுத்தலாம்.

காய்ந்த வெங்காயம்

காய்ந்த வெங்காயம்

உலர்ந்த வெங்காயம் என்னும் காய்ந்த வெங்காயம் தற்போது சூப்பர் மார்கெட் மற்றும் மளிகைக் கடைகளில் கிடைக்கிறது. இந்த வெங்காயத்தைப் பயன்படுத்துவதால், கண் எரிச்சல் மற்றும் கண்ணீர் வருவது போன்ற அசௌகரியங்கள் தவிர்க்கப்படும். 

ஆகவே பச்சை வெங்காயத்தை வாங்குவதற்கு மாற்றாக உலர்ந்த வெங்காயத்தை வாங்கி பயன்படுத்தலாம்.. பச்சை வெங்காயத்தை விட இந்த உலர்ந்த வெங்காயத்திற்கு நல்ல வாசனை உண்டு.

குடல் கழிவுகளை சுலபமாக வெளியேற்ற இந்த ஜூஸை குடிங்க !

வெங்காயச் சாற்றையும் தேனையும் கலந்து சாப்பிட்டால் சீதபேதி குணமாகும். வெங்காயச் சாற்றோடு சர்க்கரை சேர்த்து சாப்பிட வாதநோய்  குறையும். வெங்காயச் சாற்றோடு சிறிது உப்பு கலந்து அடிக்கடி சாப்பிட்டுவர, மாலைக்கண் நோய் சரியாகும்.

ஷால்லோட்

ஷால்லோட்

வெங்காயத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ள ஒரு பொருள் சின்ன வெங்காயம். வெங்காயத்தை விட விலை உயர்வானது இந்த ஷால்லோட் என்னும் சின்ன வெங்காயம். 

இதில் வெங்காயத்தை விட மிதமான அளவு காரத்தன்மை உண்டு. இந்த சின்ன வெங்காயம் உணவு வகைகளில் அதிக சுவையை சேர்க்கும்.

சோம்பு

சோம்பு

ஒவ்வாமை பாதிப்பு காரணமாக வெங்காயத்தை ஒதுக்குபவர்கள், சோம்பைப் பயன்படுத்தலாம். சிறிதளவு இனிப்பு சுவையைத் தரக் கூடியதாக இது இருக்கும். 

சமைத்தபின், வெங்காயம் போன்ற உருவகத்தைக் கொடுக்கும். சமையலில் இதனைப் பயன்படுத்துவதால் இதன் சுவை அந்த உணவில் ஊடுருவி இருக்கும்.

லீக்ஸ்

லீக்ஸ்

லீக்ஸ் வெங்காயம் மற்றும் பூண்டு (வெள்ளைப்பூண்டு),என்பவற்றை உள்ளடக்கிய பேரினமான அலியம், இதில் அடர்த்தியான வெள்ளைத் தண்டு மற்றும் தட்டையான இலைகள் இருக்கும். 

வயிற்றுப்புண்ணை குணப்படுத்தும் ஆட்டுக்குடல் குழம்பு செய்வது எப்படி?

இந்த வெள்ளைத் தண்டு பகுதியை வெங்காயத்திற்கு மாற்றாக பயன்படுத்தலாம். சூப், ஸ்டூ போன்றவற்றில் மென்மையான காரத்தைக் கொடுக்க மற்றும் சுவையை அதிகரிக்க இவற்றைப் பயன்படுத்தலாம். 

இதற்கு சந்தையில் எப்போதும் கிராக்கி நிலவுகின்றது. வெங்காயத்தின் விலை அதிகமாகும் போது, அதற்குப் பதிலாக லீக்ஸ் பயன்படுத்தப் படுகின்றது.

ச்கேலியன்

ச்கேலியன்

பச்சை வெங்காயத்திற்கு சிறந்த ஒரு மாற்று இந்த ச்கேலியன். இதனை க்ரீன் ஆனியன் என்னும் பச்சை வெங்காயம் என்றும் அழைப்பார்கள். 

வழக்கமான வெங்காயத்தை விட சல்பர் கூறுகள் குறைவாக இருக்கும் இந்த வெங்காயத்தில் காரத்தன்மை மிகக் குறைவாகக் காணப்படும்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)