பாதாம் மில்க் பவுடர் தயார் செய்வது எப்படி?





பாதாம் மில்க் பவுடர் தயார் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்
பாதாம் – 1 கப்

பனங்கற்கண்டு – 1/3 கப்

ஏலக்காய் – 6 – 8

குங்குமப்பூ – சிறிது

மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி

செய்முறை
பாதாம் மில்க் பவுடர் தயார் செய்வது
தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும் ஒரு பானில் பாதாமை எடுத்துக் கொண்டு நீா் சேர்த்து கொதிக்க வைத்து பின் அதனை எடுத்து பாதாமை வடிகட்டி குளிர்ந்த நீரால் கழுவிக் கொள்ளவும். 

பின்பு பாதாம் தோலை நீக்கி அதனை சிறிது நேரம் பேப்பர் டவ்வலில் வைத்து காய வைக்கவும். பின்பு அதனை பேக்கிங் பானில் வைத்து சுட்டெடுக்கவும் ஏலக்காய் மற்றும் குங்கும பூவை எடுத்துக் கொண்டு பனங்கற்கண்டு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்

பின்பு மஞ்சள் தூள் சேர்த்து அவற்றை நன்கு அரைத்து கொண்டு பின்பு பாதாமை சேர்த்து லேசாக அரைத்துக் கொள்ளவும். பின்பு சிறிது நேரம் ஆற வைக்கவும்

அதனை காற்றுப் புகாத டப்பாக்களில் வைத்து பயன்படுத்தலாம் ஒரு டம்ளரில் 1 மேஜைக்கரண்டி பாதாம் பால் பவுடரை எடுத்துக் கொள்ளவும் அதனுடன் சூடான பால் சேர்க்கவும் நன்கு கலக்கவும். பாதாம் மில்க் ரெடி !
Tags: