இலங்கையில் செய்யும் ருலங் அல்வா செய்வது எப்படி?





இலங்கையில் செய்யும் ருலங் அல்வா செய்வது எப்படி?

பிரவுன் சுகர் என்பது சர்க்கரையின் ஒரு வடிவமாகும், இது வெல்லப் பாகுகளைச் சேர்ப்பதால் பழுப்பு நிறத்தில் உள்ளது. பிரவுன் சர்க்கரையில் உள்ள வெல்லப்பாகு மிட்டாய் போன்ற சுவையையும் நிறத்தையும் தருகிறது. 
இலங்கையில் செய்யும் ருலங் அல்வா செய்வது
இந்த வகை சர்க்கரை பெரும்பாலும் அடர்த்தியான கேக்குகள், குக்கீ மாவு மற்றும் பார்பிக்யூ சாஸ்கள் தயாரிக்கப் பயன்படுகிறது. நாட்டு சர்க்கரை கரும்பு சாறு அல்லது பனை சாறு மூலம் தயாரிக்கப் படுகிறது. 

கரும்புச் சாறு கெட்டியாகும் வரை காய்ச்சப்படுகிறது. அது சுத்திகரிக்கப் படாததால் தனிப்பட்ட சுவையைக் கொண்டுள்ளது. பேரிச்சம் பழம் கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவுகிறது என நிபுணர்கள் கூறுகின்றனர். 

கெட்ட கொலஸ்ட்ராலை நீக்கி, ஆரோக்கியமான கொலஸ்ட்ரால் அளவை மேம்படுத்த உதவுகிறது எனக் கூறுகின்றனர். பேரிச்சம் பழத்தில் ஊட்டச்சத்து நிறைந்துள்ளது. 
கனிமங்கள், சர்க்கரை, கால்சியம், இரும்பு, பொட்டாசியம் போன்ற முக்கிய சத்துக்கள் உள்ளன. சரி இனி ரவை பயன்படுத்தி இலங்கையில் செய்யும் ருலங் அல்வா செய்வது எப்படி? என்று இந்த பதிவில் கண்போம். 

தேவையான பொருள் : 
ரவை – அரை கப்

ப்ரவுன் சர்க்கரை – கால் கப்

நெய் / வெண்ணெய் – ஒரு மேசைக்கரண்டி

பேரீச்சம் பழம் – 5

முந்திரி – 5

உப்பு – ஒரு சிட்டிகை

வெனிலா எசன்ஸ் – அரை தேக்கரண்டி

பால் – அரை கப்

செய்முறை :

பாலை கொதிக்க வைத்து சூடாக வைத்திருக்கவும். முந்திரி மற்றும் பேரீச்சம் பழத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் ரவையைப் போட்டு சிவக்க வறுக்கவும். அதனுடன் வெண்ணெய் சேர்த்து கலக்கவும். 

பிறகு சர்க்கரை, பொடியாக நறுக்கிய பேரீச்சை மற்றும் முந்திரி சேர்த்து 2 நிமிடங்கள் கிளறவும். அதில் சூடான பாலை ஊற்றி கலந்து மூடி விடவும். 

5 நிமிடங்கள் சிறு தீயில் வைத்து கிளறி இறக்கி, நெய் தடவிய தட்டில் பரவலாகக் கொட்டி அழுத்தி விடவும். சுவையான ருலங் அலுவா தயார். ஆறியதும் துண்டுகள் போட்டுப் பரிமாறவும்.
Tags: