சுவையான மாங்காய் வடை செய்வது எப்படி?





சுவையான மாங்காய் வடை செய்வது எப்படி?

மாம்பழத்தை விட மாங்காயில் கலோரிகள் குறைவாக உள்ளது. மேலும் இதில் சர்க்கரை அளவும் குறைந்து இருக்கிறது. இது உடலில் வளர்சிதை மாற்றத்திற்கு வழிவகுக்கும் மற்றும் கொழுப்பை குறைக்க வல்லது. 
மாங்காய் வடை செய்வது
இதை தினமும் சிறிய அளவில் உண்டு வந்தால் உடல் எடை தானாக குறையும். உங்களுக்கு மலச்சிக்கல் பிரச்சனை இருந்தாலும் அல்லது செரிமான பிரச்சினை இருந்தாலும், மாங்காயை சாப்பிட்டு வந்தால் அனைத்து பிரச்சினைகளையும் நீக்கி விடும். 
மாங்காய் கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் நல்லது. உணவியல் நிபுணர்  கூறுகிறார். கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் குமட்டல் மற்றும் காலை சோர்வு ஆகியவை மாங்காய் சாப்பிட சரியாகி விடும்.

வைட்டமின் A மற்றும் வைட்டமின் C சத்துடன் சேர்ந்து மக்னீசியம் சத்து இதில் அதிகம் உள்ளது. இது உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தையும் வெளியேற்றம் செய்கிறது. இதனால் நம் சருமம் மற்றும் தலைமுடிக்கு நன்மை விளைகிறது. 

இரண்டையுமே பளபளப்பாக மாற்றுகிறது. பச்சை மாம்பழம் உங்கள் உடலில் உள்ள கொழுப்பின் அளவையும் கட்டுப்படுத்துகிறது. 

வைட்டமின்-பி-3 மிகக் குறைவான உணவுப் பொருட்களிலேயே உள்ளது. அதில் பச்சை மாம்பழமும் ஒன்று. இது நிசின் என்றும் அழைக்கப் படுகிறது. 

இதய பிரச்சனைகளை நீக்குவதில் இது மிகவும் பயனுள்ள உறுப்பு. இதய நோய் உள்ளவர்கள் தினமும் மாம்பழத்தை பச்சையாக சாப்பிட வேண்டும்.

என்னென்ன தேவை?
மாங்காய் – 1 (துருவிக் கொள்ளவும்),

பச்சை மிளகாய் – 2 (விழுதாக அரைத்துக் கொள்ளவும்),

உளுத்தம் பருப்பு – 100 கிராம்,

கடலைப் பருப்பு – 100 கிராம்,

சோம்பு – 1 டீஸ்பூன்,

உப்பு – தேவைக்கு,

கொத்த மல்லித்தழை, கறிவேப்பிலை – சிறிது,

எண்ணெய் – தேவையான அளவு.

எப்படிச் செய்வது?
பருப்புகளை நீரில் ஊற வைத்து கொர கொரப்பாக அரைத்துக் கொள்ளவும். இதனுடன் துருவிய மாங்காய், மிளகாய் விழுது, சோம்பு, உப்பு, அரிந்த கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பிசைந்த மாவை வடையாக தட்டி பொன்னிறமாக இருபுறமும் திருப்பிப் போட்டு பொரித்தெடுக்கவும். எண்ணெய் நன்றாக சூடாகாவிட்டால் வடை எண்ணெய் குடிக்கும். 

இந்த வடை புளிப்பு சுவையுடன் டேஸ்ட்டாக இருக்கும். மாங்காயில் வைட்டமின் ஏ, நார்ச்சத்து உள்ளன. பசியை தூண்டக்கூடியது. 

உடலுக்கு சூடு என மாங்காயை பலர் சாப்பிடுவதில்லை. எதையுமே அளவோடு சாப்பிட்டால் அதனதன் வைட்டமின் சத்துகள் நமக்குக் கிடைக்கும்.
Tags: