குழந்தைகளுக்கு பிடித்த தேங்காய் சாதம் செய்வது எப்படி?

குழந்தைகளுக்கு பிடித்த தேங்காய் சாதம் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்.: 
பாஸ்மதி அரிசி – 200 கிராம், 

உடைத்த உளுத்தம் பருப்பு – 2 டேபிள் ஸ்பூன், 

பச்சை மிளகாய் – 2, 

முந்திரிப் பருப்பு – 10 (வறுத்துக் கொள்ளவும்), 

நன்கு முற்றிய தேங்காய் – ஒன்று, 

கடுகு – ஒரு டேபிள் ஸ்பூன், 

தேங்காய் எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

பெருங்காயத்தூள், கறிவேப்பிலை – சிறிதளவு, 

செய்முறை.: 
குழந்தைகளுக்கு பிடித்த தேங்காய் சாதம்
அரிசியுடன் ஒரு பங்குக்கு ரெண்டு பங்கு தண்ணீர் விட்டு குக்கரில் வைத்து ரெண்டு விசில் விட்டு இறக்கவும். தேங்காயை உடைத்து துருவிக் கொள்ளவும். 

வாணலியில் எண்ணெய் விட்டு தேங்காய்த் துருவலைப் போட்டு மிதமான தீயில் பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். 
வாணலியில் ஒரு டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, உளுத்தம் பருப்பு சேர்த்து, நறுக்கிய பச்சை மிளகாய் போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

அகலமான பாத்திரத்தில் சாதத்தைப் போட்டு வறுத்த தேங்காய்த் துருவல், தாளித்த பொருள்கள், உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து, கறிவேப்பிலையைக் கிள்ளிப் போட்டு நன்றாகக் கலக்கவும். 
வறுத்த முந்திரிப் பருப்பை மேலே பரவலாக சேர்க்கவும். குறிப்பு: சாதம் கலக்கும் போது ஒரு ஸ்பூன் நெய் விட்டு கலந்தால், வாசனை நன்றாக இருக்கும்; ருசியும் கூடும்.
Tags: