சில்லி சம்பல் பேஸ்ட் செய்வது எப்படி?





சில்லி சம்பல் பேஸ்ட் செய்வது எப்படி?

உடல் எடையை குறைக்க எத்தனையோ டிப்ஸ்கள் சொல்லப்படுகின்றன என்றாலும், மிளகாயும் அதில் ஒன்று என்பதுதான் ஆச்சரியமான தகவல். சிகப்பு மிளகாயை பொறுத்தவரை, பெரும்பாலும் சமையலுக்கு பயன்படுத்தி வருகிறோம். 
சில்லி சம்பல் பேஸ்ட் செய்வது
இதனால், உணவின் சுவை + நிறம் கூடுகிறது. சிவப்பு மிளகாயில் உள்ள கேப்சைசின், உடலில் உள்ள கொழுப்பை எரிக்க உதவுகிறது. மகிழ்ச்சியான ஹார்மோன்கள் உருவாக உதவுகிறது. 

நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்க உதவுகிறது. இதிலுள்ள பொட்டாசியம், ரத்த அழுத்த அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. ரத்த சர்க்கரையை குறைக்கவும் உதவுகிறது. 
சிவப்பு மிளகாயை தூளாக பயன்படுத்துவதை விட, நேரடியாக உலர்ந்த மிளகாயாக பயன்படுத்துவது நல்லது என்கிறார்கள். இந்த சிகப்பு மிளகாயில் உள்ள சத்துக்கள் என்னென்ன தெரியுமா? 

சிகப்பு மிளகாயில் வைட்டமின் A, B, M, K, தாமிரம், பொட்டாசியம் போன்ற சத்துக்கள் உள்ளன. காப்சைசின் என்ற பொருள் இதில் அடங்கியுள்ளது. 

மிளகாயின் காரத்தன்மைக்கு காரணமே இந்த ஆன்டிஆக்சிடெண்ட் கூறுகள் தான். ஆரஞ்சு பழத்தைவிட இந்த சிவப்பு மிளகாய் அதிக அளவு வைட்டமின் C நிறைந்துள்ளதாம். 

அரை கப் சிவப்பு மிளகாயில் 107.8 மிகி வைட்டமின் C இருக்கிறதாம்.மலேசியர் மட்டுமின்றி இந்தியர், சீனர் என அனைவரும் விரும்பிச் சாப்பிடக்கூடிய முக்கியமான உணவுகளின் தொகுப்பு இது. 

இந்தியாவில் கிடைக்காத பொருட்கள் மற்றும் முட்டைக்கு மாற்றாகச் சேர்க்கப்பட வேண்டியவை பற்றியும் குறிப்புகள் உள்ளன. சரி இனி ஆட்டு மூளை பயன்படுத்தி சில்லி சம்பல் பேஸ்ட் செய்வது எப்படி? என்று இந்த பதிவில் கண்போம்.  
தேவையானவை: 

காய்ந்த மிளகாய் – 5, 

பெரிய சிவப்பு மிளகாய் (ஜாலபினோ) – 3, 

பூண்டு – 4 பல், 

லெமன் க்ராஸ் – 2 இன்ச் அளவு, 

கலங்கா (அ) இஞ்சி – ஒரு இன்ச் அளவு, 

சின்ன வெங்காயம் – 4, 

கட்டி மஞ்சள் – 1/2 இன்ச் அளவு (அல்லது) 

மஞ்சள்தூள் – ஒரு டீஸ்பூன்.

செய்முறை:
கொதிக்கும் தண்ணீரில் காய்ந்த மிளகாயை அரை மணி நேரம் ஊற வைத்து, அதனுடன் மேலே கொடுத்துள்ள மற்ற அனைத்துப் பொருட்களையும் சேர்த்து நைஸாக அரைக்கவும். 
இந்த சில்லி பேஸ்ட் தான் அனைத்து வகை கிரேவி (சம்பல்) களுக்கும் பயன்படுத்தக்கூடிய ஃப்ரெஷ் மசாலா.
Tags: