துவரம் பருப்பு இட்லி செய்வது எப்படி?





துவரம் பருப்பு இட்லி செய்வது எப்படி?

துவரம் பருப்பில் நல்ல அளவில் புரோட்டீன், ஃபோலிக் ஆசிட் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும் இதில் காம்ப்ளக்ஸ்  கார்போ ஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், குடலியக்கம் சீராக இருந்து, மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படுவதை தடுக்கலாம்.
துவரம் பருப்பு இட்லி செய்வது
ஆன்டிஆக்ஸிஜன்டாக செயல்பட்டு உடல்நலத்தை மேம்படுத்துவதோடு நோய் எதிர்ப்பாற்றலையும் அதிகரிக்கிறது. துவரம் பருப்பில் உள்ள பொட்டாசியம், நார்ச்சத்து, குறைந்தளவு கொழுப்புச்சத்து ஆகியவை இதயநலத்தை மேம்படுத்துகிறது.

பொட்டாசியம் இரத்த அழுத்தத்தைச் சீராக்குகிறது. நார்ச்சத்து கொழுப்பு சேகரமாவதைத் தடுக்கிறது. துவரம் பருப்பில் உள்ள நார்ச்சத்து உணவை நன்கு செரிமானம் செய்ய உதவுகிறது.

தேவையான பொருட்கள் :

இட்லி அரிசி - 1 கப்,
துவரம் பருப்பு - 1 கப்,

உப்பு - தேவைக்கு,

சோடா உப்பு - 1 சிட்டிகை,

மோர் மிளகாய் - 3,

காய்ந்த மிளகாய் - 3.

தாளிக்க...

எண்ணெய் - தேவைக்கு,

கடுகு - 1 டீஸ்பூன்,

கடலைப் பருப்பு - 2 டீஸ்பூன்,

உளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன்,

கறிவேப்பிலை - 1 கொத்து. 

செய்முறை : 

இட்லி அரிசியையும், துவரம் பருப்பையும் 4 மணி நேரம் ஊற வைத்து, உப்பு சேர்த்து கொர கொரப்பாக இட்லி மாவு பதத்திற்கு அரைத்து 8 மணி நேரம் வரை புளிக்க வைத்து சோடா உப்பு சேர்த்து கலக்கவும். 

இட்லி தட்டில் எண்ணெய் தேய்த்து, மாவை ஊற்றி 15 நிமிடம் வேக வைக்கவும். இட்லிகள் நன்கு ஆறியதும் உதிர்த்துக் கொள்ளவும். 

கடாயில் எண்ணெயை காய வைத்து மோர் மிளகாய், காய்ந்த மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வறுத்து, ஆறியதும் கொர கொரப்பாக கையால் பொடித்து கொள்ளவும். 

பிறகு அதே கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்து, 1/4 கப் தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து கொதி வந்ததும் உதிர்த்த இட்லிகளை சேர்க்கவும். 

இட்லி உதிரியாக வரும் வரை மிதமான தீயில் வைத்து கிளறவும். கடைசியாக இறக்கும் போது கொர கொரப்பாக பொடித்த மோர் மிளகாய், காய்ந்த மிளகாயை போட்டு கிளறி பரிமாறவும். 

சூப்பரான சூப்பரான துவரம் பருப்பு இட்லி உப்புமா ரெடி.
Tags: