வெள்ளை முடியை குறைக்கும் முட்டை எண்ணெய் தயாரிக்க தெரியுமா?

வெள்ளை முடியை குறைக்கும் முட்டை எண்ணெய் தயாரிக்க தெரியுமா?

தலைமுடிப் பிரச்சினை என்று பலருக்கும் பல்வேறு விதத்தில் மனதளவில் கஷ்டத்தை உருவாக்குகிறது. 
வெள்ளை முடியை குறைக்கும் முட்டை எண்ணெய்
இதில் ஆண்கள் என்றோ பெண்கள் என்றோ வேறுபாடு இல்லாமல் முடி கொட்டுதல், பொடுகு தொல்லை, அடர்த்தி குறைவது, வெள்ளைமுடி, போன்ற பலவித பிரச்சினைகள் ஏற்படுகிறது.  

இதில் மிகவும் மனக் கஷ்டத்தை உருவாக்குவது வெள்ளை முடியை .. இந்த வெள்ளை முடியை கருமையாக போவதற்கு பலரும் பல விதங்களில் முயற்சி செய்து கொண்டு தான் இருக்கிறோம். 

ஆனால் வார்த்தைகளில் எந்தவித பலனும் கிடைத்ததாக தெரியவில்லை என்று பலரும் விளங்குவது தெரிகிறது . அதனைப் பற்றியே இந்த செய்தியை காண்போம் ... 

முட்டை ஆயில் ... 
முட்டை ஆயில்
முட்டையில் இருந்து தயாரிக்கப்படும் இந்த எண்ணெயானது பலவித நன்மைகளை கொண்டதாக உள்ளது .. இது முடியில் இருக்கும் பிரச்சனைகளை சரி செய்யக்கூடிய நல்ல எண்ணெய் .

முட்டை எண்ணையில் என்னென்ன உள்ளது ... 
முட்டை எண்ணையில் என்னென்ன உள்ளது
இதில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள் இ எஃப் ஏ போன்ற பொருட்கள் நிறைந்து காணப்படுகிறது.. 

இவை தலையில் உள்ள ரத்த ஓட்டத்தை சீராக்கி தலைமுடியை நன்றாக வளரச் செய்கிறது மேலும் இதற்கு நரைமுடியை தடுக்கக்கூடிய ஆற்றலும் உள்ளது.

சிறந்த கண்டிஷனர் ..
சிறந்த கண்டிஷனர்
இது சிறந்த கண்டிஷனராகவும் செயல்பட்டு முடியை கொட்டிய இடத்தில் செல்களை உற்பத்தி செய்ய உதவுகிறது.. 

இந்த முட்டை எண்ணெயில் உள்ள கொலஸ்ட்ரால் வறண்ட தலையை ஈரப்பதத்துடன் வைத்து பொலிவான முடியைப் பெற போதுமான சத்துக்களை வழங்குகிறது.

நரைமுடி ...

நம்முடைய தலையிலுள்ள நரைமுடியைப் போக்குவதற்கு இந்த முட்டையினை அனைத்து ஊட்டச்சத்துகளையும் வழங்குகிறது ..

இந்த எண்ணெய் தயாரிக்க தேவையான பொருட்கள் :

முட்டை - 3 

ஆலிவ் ஆயில் - 3 டீஸ்பூன்

செய்முறை விளக்கம் :
முட்டை எண்ணெய் செய்முறை
முதலில் முட்டையின் மஞ்சள் கருவை மட்டும் தனியாக எடுத்து அதனை ஆலிவ் ஆயிலுடன் சேர்த்து நன்கு கலக்கிக் கொண்டே இருக்க வேண்டும்.  

அதற்குப் பிறகு அதனை 5 முதல் 10 நிமிடம் வரை கொதிக்க விட்டு இறக்கிக் கொள்ளவும் . இப்போது முட்டை எண்ணெய் தயாராகி விட்டது.

பயன்படுத்துவது எப்படி…
முட்டை எண்ணெய் பயன்படுத்துவது எப்படி
இப்படி சூடாக உள்ள இந்த எண்ணையை ஆறியபிறகு நான் பயன்படுத்த வேண்டும். 

நம்முடைய தலைமுடியை ஒவ்வொரு பாகமாக பிரித்துக் கொண்டு இந்த எண்ணெயை தலை முழுக்க அதனுடைய முடியின் வேர்களில் படும்படி தடவிக் கொண்டு பத்து நிமிடம் வரை நன்றாக மசாஜ் செய்ய வேண்டும் . 
பிறகு மூன்று மணி நேரம் அப்படியே விட்டு சீயக்காய் தூள் பயன்படுத்தி தலைக்கு குளிக்க வேண்டும் ..

முகம் பொலிவாக இருக்க…
முகம் பொலிவாக இருக்க
இந்த எண்ணெயானது நம்முடைய முகத்தை மினுமினுப்பாக வைத்துக் கொள்ள நன்கு உதவும் மேலும் பருக்களினால் ஏற்பட்ட தழும்புகள் வெடிப்புகள் சூடுபட்ட புண்கள் ஆகியவற்றையும் இது குணப்படுத்தும் .

மேலும் நீண்ட நாட்கள் முகத்தை இளமையாக வைத்துக் கொள்ள இந்த முட்டை எண்ணெய் உதவுகிறது. இது வறண்ட சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்துக் கொள்ளும் .

நகம் உடைவது …
நகம் உடைவது
இன்று பலருக்கும் நகங்கள் அடிக்கடி உடைந்து அழகில்லாமல் காணப்படுகிறது. இதற்கு பலரும் பலவிதமான மாத்திரைகளை எடுத்துக் கொண்டு உள்ளார்கள். ஆனால் இதற்காக இவ்வளவு கஷ்டப்பட வேண்டிய அவசியமில்லை.
இந்த முட்டை எண்ணெய் பயன்படுத்தி நகம் உடையும் பிரச்சினைக்கு எளிதில் தீர்வு காணலாம் மேலும் நகத்தில் கருப்பாக இருந்தால் அதனையும் சரி செய்து விட முடியும் .
Tags: