தேவையான பொருட்கள் :
முட்டை – 3

தக்காளி கெட்ச்அப் (tomato ketchup)- 1 டீஸ்பூன்

தக்காளி சில்லி சாஸ் (tomato chili sauce) – 1 தேக்கரண்டி

புளி சாறு – 3 தேக்கரண்டி

எலுமிச்சை சாறு – 1 தேக்கரண்டி

வறுத்த சீரகம் – 1 தேக்கரண்டி

உப்பு – சுவைக்கு

பச்சை மிளகாய் – 1

சாட் மசாலா – சிறிதளவு

வெங்காயத்தாள் – சிறிதளவு

பூந்தி – சிறிதளவு

செய்முறை : 
உடல் எடை குறைய முட்டை சாட் தயாரிப்பது
முட்டையை வேக வைத்து இரண்டாக வெட்டி கொள்ளவும். ப.மிளகாய், வெங்காயத்தாளை பொடியாக நறுக்கி வைக்கவும். 
ஒரு பாத்திரத்தில் தக்காளி கெட்ச்அப், தக்காளி சில்லி சாஸ், புளி சாறு, எலுமிச்சை சாறு, வறுத்த சீரகம், உப்பு, பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக கலக்கவும். 

ஒரு தட்டில் மீது வெட்டிய முட்டையை வைத்து அதன் மேல் கலந்து வைத்துள்ள சாஸை எல்லா இடங்களிலும் படும்படியாக ஊற்றவும். 
கடைசியாக அதன் மேல் வெங்காயத்தாள், பூந்தி, சாட் மசாலா தூவி பரிமாறவும். சுவையான முட்டை சாட் ரெடி