மசால் வடை குழம்பு தயார் செய்வது எப்படி?





மசால் வடை குழம்பு தயார் செய்வது எப்படி?

இந்த மசால் வடைக் குழம்பை சாதத்திற்கு ஊற்றி சாப்பிட்டால் சுவையாக இருக்கும் .
மசால் வடை குழம்பு தயார் செய்வது
தேவையான பொருட்கள்:

10 மசால் வடை

2 பச்சை மிளகாய்

2 வெங்காயம்

2 tbsp மல்லிப் பொடி

1 ½ tbsp மிளகாய் பொடி

5 tbsp தேங்காய் துருவியது

மஞ்சள் பொடி சிறிதளவு

5 முந்திரி

½ tbsp சோம்பு

2 tbsp சமையல் எண்ணெய்

2 கிராம்பு

இஞ்சி சிறுதுண்டு

¼ tbsp மிளகு

கறிவேப்பிலை

மல்லி உப்பு தேவையான அளவு

செய்முறை:

வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை சிறியதாக நறுக்க வேண்டும். கடாயில் எண்ணெய் ஊற்றாமல் சோம்பு மற்றும் முந்திரியை வறுக்க வேண்டும். 

பின்பு தேங்காய் சேர்த்து நன்கு வறுக்க வேண்டும். அதனுடன் இஞ்சி சேர்த்து மிருதுவாக அரைக்க வேண்டும். எண்ணெய் நன்கு காய்ந்ததும் அதில் கிராம்பு, பச்சை மிளகாய் போட்டு நன்கு பொரிய விட வேண்டும்.
பொறிந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய், மல்லி, மற்றும் மஞ்சள் பொடி சேர்த்து நன்கு வதக்க வேண்டும். நன்கு வதங்கியதும் அதில் அரைத்த தேங்காய் மற்றும் உப்பு சேர்த்து மீண்டும் வதக்க வேண்டும்

நன்கு வதக்கிய பின்பு மூன்று டம்ளர் நீர் ஊற்றி குழம்பை நன்கு கொதிக்க வைக்க வேண்டும். குழம்பு நன்கு கொதித்ததும் அதில் மசால் வடைகளை உள்ளே போட வேண்டும்.

வடை குழம்பிலுள்ள நீரைக் குடித்து விடும். குழம்பு போதுமான அளவு கெட்டியானதும் மல்லி, கறிவேப்பிலை தூவி இறக்கி வைக்க வேண்டும்.

இப்போது சூடான மசால் வடைக் குழம்பு தயார்.இந்த மசால் வடைக் குழம்பை, சாதத்திற்கு ஊற்றி சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
Tags: