காஞ்சிபுரம் உப்புமா தயார் செய்வது எப்படி?





காஞ்சிபுரம் உப்புமா தயார் செய்வது எப்படி?

உப்புமா அல்லது உப்மா என்பது தென்னிந்தியாவைப் பூர்விகமாகக் கொண்ட இந்தியாவின் பிரபலமான சிற்றுண்டியாகும். உப்பும் மாவும் சேர்ந்த கலவையே உப்புமா ஆகும். 
காஞ்சிபுரம் உப்புமா தயார் செய்வது
மிகக்குறைவான செய்பொருட்களைக் கொண்ட உப்புமா சுலபமாக தயாரிக்கப் படுவதாலும், சிறந்த சுவையுடையதாக இருப்பதாலும் பெரும்பான்மையான மக்களால் விரும்பப் படுகிறது.

பெயரைச் சொன்னாலே குழந்தைகள் தெறித்து ஓடும் ஒரு டிபன்..? உப்புமா! ஜவ்வரிசி, பிரெட், கோதுமை ரவை, அரிசி, சேமியா... என விதவிதமாகச் செய்து கொடுத்தாலும்கூட பெரும்பாலான குழந்தைகளுக்கு இது அலர்ஜி. 
ஆகாத மருமகன் வீட்டுக்கு வந்தா உப்புமாவைக் கிண்டி வை! என நம்மூரில் ஒரு பழமொழியே உண்டு. விருந்தினர்களின் திடீர் வருகையின் போது கைகொடுத்து உதவுவது, வேலைக்குப் போகும் மகளிருக்கு பல நாள்களுக்கு உற்றதுணையாக இருப்பது, 
10 நிமிடங்களுக்குள் செய்து விடலாம் என்கிற பெருமைக்குரிய சிற்றுண்டி... என பல சிறப்புகளைக் கொண்டது உப்புமா. சட்டென்று செய்து விடலாம். 

ஆறிய உப்புமாவைச் சாப்பிடுவது கொஞ்சம் சிரமம். இன்றைய பரபரப்பான வாழ்க்கையில் அடிக்கடி இதைச் செய்து போட்டாலும் வெறுப்பு வந்து விடும். 

இந்தக் காரணங்களால் தான் பிடிக்காத ஒரு சிற்றுண்டியாக இது கருதப்படுகிறது. ஆனாலும், உப்புமாவைப் பிடிக்காத குழந்தைகள்கூட, வாணலியில் அதன் அடிப்பிடித்த பகுதிக்கு ரசிகர்களாக இருப்பார்கள். 

உண்மையில், சாம்பாருடன் சேர்த்துச் சாப்பிட இது தனிச்சுவை தரும் என்பதை மறுப்பதற்கில்லை. இந்த எளிய உணவில் எண்ணற்ற பல சத்துக்களும் இருக்கின்றன. அவை, குழந்தைகளுக்கு ஊட்டம் கொடுப்பவை. 

தேவையான பொருட்கள்:
ரவை - ஒரு கப்

3 பச்சை மிளகாய்

இஞ்சி ஒரு சிறு துண்டு

2 tbsp தேங்காய் துருவல்

சாம்பார் வெங்காயம் ( 10 - 15)

மஞ்சள் தூள்

2 tbsp எண்ணெய் + நெய்

1 tsp மிளகு

கடுகு, சீரகம்

10 முந்திரி

1 tsp கடலைப்பருப்பு

1 tsp உளுந்து

கறிவேப்பிலை

உப்பு
கட்டிட கட்டுமானத்தின் போது பணிகளை முறையாகப் மேற்கொள்ள !
செய்முறை:

பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம், மிளகு, உளுந்து, கடலைப்பருப்பு சேர்த்து தாளிக்கவும். பின் முந்திரி சேர்த்து சிவந்ததும் தேங்காய் துருவல் சேர்த்து வதக்கவும்.

இதில் பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், சாம்பார் வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து சிறிது உப்பு போட்டு வதக்கவும். 2 - 2 1/2 கப் அளவு நீர் விட்டு மஞ்சள் தூள், உப்பு போட்டு கொதிக்க விடவும்.

கொதிக்கும் நீரில் ரவையைக் கொட்டி கிளறி மூடி விட்டு மிதமான தீயில் வைத்து வேக விடவும். விரும்பினால் மேலே சிறிது நெய் விடவும். சுவையான காஞ்சிபுரம் உப்புமா தயார்.
Tags: