தோசைக்காய் பருப்பு தயார் செய்வது எப்படி?





தோசைக்காய் பருப்பு தயார் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்.:
தோல், விதை நீக்கி நறுக்கிய தோசைக்காய் (சிறிய முலாம்பழம் போல் மஞ்சள் நிறத்தில் விதையுடன் இருக்கும்) – ஒரு கப், 

வேக வைத்த துவரம் பருப்பு – அரை கப், 

தக்காளி – 4 (துண்டுக ளாக்கவும்), 

கீறிய சிறிய பச்சை மிளகாய் – 6, 

மஞ்சள்தூள், கறிவேப்பிலை – சிறிதளவு, 

உப்பு – சிறிதளவு.

தாளிக்க.: 

கடுகு, வெந்தயம் – தலா அரை டீஸ்பூன், 

பெருங்காயத்தூள் – சிறிதளவு, 

எண்ணெய் – 2 டீஸ்பூன்.

செய்முறை.: 

தாளிக்க கொடுத்துள்ள வற்றை எண்ணெயில் தாளித்து, கீறிய பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும். 
தோசைக்காய் பருப்பு தயார் செய்வது
இதனுடன் தக்காளித் துண்டுகள், தோசைக்காய் துண்டுகள், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். 

பிறகு, சிறிதளவு நீர், வெந்த துவரம்பருப்பு சேர்த்து கொதிக்க விட்டு இறக்கி, கறிவேப்பிலை சேர்த்துப் பரிமாறவும். இது சாதம், சப்பாத்திக்கு சரியான ஜோடி.
Tags: