தினசரி மூன்று வேளைகளும் உணவாக உட்கொள்ளத் தக்க தானிய வகைகளில் கோதுமை பிரதான இடத்தை வகிக்கிறது. 
சுவையான கோதுமை பொங்கல் செய்வது எப்படி?
உடலை புத்துணர்ச்சி பெற செய்யும் உணவாக கோதுமை இருக்கிறது. அது போக கோதுமையில் நார்ச்சத்து அதிகம் நிறைந்திருக்கிறது. 
இத்தகைய நார்ச்சத்து நிறைந்த கோதுமையை உணவாக செய்து சாப்பிடுவதால் இரத்தத்தில் இருக்கின்ற நச்சுக்கள் அனைத்தும் வெளியேறி, உடலை தூய்மைப்படுத்துகிறது. 

தோலில் இருக்கின்ற நச்சுக்கள் வெளியேறி விடுவதால் முகப்பருக்கள், கரும்புள்ளிகள் போன்றவை ஏற்படாமல் சருமத்தை அழகாக வைத்திருக்க உதவுகிறது. 

அப்படிப்பட்ட கோதுமை கொண்டு சுவையான வீட் பொங்கல் செய்வது எப்படி? என்று பார்ப்போம்.
தேவையானவை:

கோதுமை ரவை – ஒரு கப்,

வேக வைத்த பாசிப்பருப்பு – கால் கப்,

மிளகு (ஒன்று இரண்டாக உடைத்தது) – அரை டேபிள் ஸ்பூன்,

சீரகம் – அரை டேபிள் ஸ்பூன்,

வறுத்த முந்திரி – 8,

பட்டாணி – 1 டேபிள் ஸ்பூன்,

கேரட் துருவல் – 2 டேபிள் ஸ்பூன்,

நெய் – 4 டேபிள் ஸ்பூன்,

இஞ்சி – ஒரு துண்டு (பொடியாக நறுக்கவும்),

உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
சுவையான கோதுமை பொங்கல் செய்வது எப்படி?
கடாயில் கொஞ்சம் நெய் விட்டு கோதுமை ரவையை வறுத்து, தண்ணீர் சேர்த்து வேக விடவும். 

அதனுடன் வேக வைத்த பாசிப்பருப்பு, உப்பு சேர்த்துக் கிளறவும். இன்னொரு கடாயில் சிறிது நெய் விட்டு… சீரகம், மிளகு போட்டு வறுக்கவும்.
பிறகு, பட்டாணி, இஞ்சி, கேரட் துருவல், முந்திரிப் பருப்பு போட்டு வதக்கி, கோதுமை கலவையில் கலந்து, மீதமுள்ள நெய் சேர்த்துக் கலந்து இறக்கவும்.