தேவையானவை
பறங்கிக்காய் துருவல் - 2 கப் (அழுத்தி அளக்கவும்)

பால் - 3/4 கப்

வெல்லம் பொடித்தது - 3/4 கப்

நெய் - 3 முதல் 4 டீஸ்பூன் வரை

முந்திரி பருப்பு - சிறிது

பறங்கி விதை - சிறிது (விருப்பப்பட்டால்)

காய்ந்த திராட்சை - ஒரு கைப்பிடி அளவு

ஏலக்காய் தூள் - 1/4 டீஸ்பூன்
செய்முறை :
பறங்கிக்காய் வெல்ல அல்வா
முதலில் ஒரு பெரிய அளவு பறங்கிக்காய் துண்டை எடுத்து, தோல் மற்றும் விதைகளை நீக்கி விட்டு, சன்னமாகத் துருவிக் கொள்ளவும். 2 கப் அளவிற்கு துருவலை எடுத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் நெய் விட்டு அதில் முந்திரி, திராட்சை ஆகியவற்றை வறுத்தெடுத்து, தனியாக வைத்துக் கொள்ளவும். 

அதே வாணலியில் மேலும் ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்து அதில் பறங்கிக்காய் துருவலைப் போட்டு வதக்கவும்.

அடுப்பை குறைந்த தீயில் வைத்து 5 முதல் 10 நிமிடங்கள் வரை வதக்கிய பின் பாலைச் சேர்த்துக் கிளறவும். மூடி போட்டு வேக விடவும். பால் அனைத்தையும் இழுத்துக் கொண்டு காய் வெந்ததும், வெல்லத்தூளைப் போட்டு கிளறவும்.
வெல்லம் நன்றாகக் கலந்து, அல்வா கெட்டியானவுடன் (10 முதல் 15 நிமிடங்கள் ஆகும்) மீதமுள்ள நெய்யை விட்டு கிளறவும். 
கடைசியில் ஏலக்காய் தூள், வறுத்த முந்திரி, திராட்சை ஆகிய வற்றைச் சேர்த்துக் கிளறி, நெய் தடவிய ஒரு கிண்ணத்தில் மாற்றி வைக்கவும். பறங்கி விதையை தூவி பரிமாறவும்.