லேயர்டு ஃப்ரூட் சாலட் வித் கேக் செய்வது எப்படி?





லேயர்டு ஃப்ரூட் சாலட் வித் கேக் செய்வது எப்படி?

வரலாற்று சிரியர்களின் கூற்றுப்படி, பழ சாலடுகள் பண்டைய கிரேக்கர்கள் மற்றும் ரோமானியர் களிடையே மிகவும் பிரபலமாக இருந்தன. காலப்போக்கில் சாலடுகள் மிகவும் சிக்கலானதாக மாறிவிட்டன. 
லேயர்டு ஃப்ரூட் சாலட் வித் கேக்
இப்போது பல விதமான பாணிகளில் பழ சாலட்கள் உள்ளன. இங்கிலாந்தில் 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த காம்போட் பழமையான பழ சாலட்களில் ஒன்றாகும்.

ஃப்ரூட் சாலட் என்பது பல்வேறு வகையான பழங்களைக் கொண்ட ஒரு உணவாகும், சில சமயங்களில் ஒரு திரவத்தில், அவற்றின் சாறுகள் அல்லது ஒரு சிரப் பரிமாறப் படுகிறது. 

வெவ்வேறு வடிவங்களில், பழ சாலட்டை ஒரு பசியை உண்டாக்கும் அல்லது சாலட்டாக ஒரு பக்கமாக பரிமாறலாம்.

என்னென்ன தேவை?
ஸ்பான்ஞ் கேக் ஸ்லைஸ் - 3,

மேங்கோ அல்லது விருப்பமான கஸ்டர்ட் பவுடர் - 2 டேபிள் ஸ்பூன்,

பால் - 1 கப்,

சர்க்கரை - 1/2 கப்,

பங்கனப்பள்ளி மாம்பழம் - 1,

சர்க்கரை தூள் - 2 டீஸ்பூன்,

கிரீம் - 1½ கப்,

அலங்கரிக்க 

பொடியாக நறுக்கி கலந்த பழக்கலவை - 1 கப் 

அல்லது சாக்லேட் சிப்ஸ் அல்லது நட்ஸ் டிரை ஃப்ரூட்ஸ்.
எப்படிச் செய்வது?

கேக்கை சதுர துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். பாத்திரத்தில் கஸ்டர்ட் பவுடர், பால், சர்க்கரை சேர்த்து கலந்து, அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். 

கெட்டியான கூழ் பதத்திற்கு வந்ததும் இறக்கி ஆற வைத்து, பழக்கலவையை கலந்து வைக்கவும். மாம்பழத்தை தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். 

கிரீமை பொடித்த சர்க்கரையுடன் பொங்க அடித்து தனியாக வைத்துக் கொள்ளவும்.

பரிமாறும் முறை...
ஒரு கண்ணாடி புட்டிங் பாத்திரத்தில் முதலில் கேக் துண்டுகளை அடுக்கி, அதற்கு மேல் கஸ்டர்ட் கலவையை லேயராக ஊற்றி சுற்றிலும் பரப்பவும். 

அதற்கு மேல் மாம்பழத் துண்டுகளை பரப்பி, மேலே கிரீம் கலவையை ஊற்றவும். 
கடைசியாக அலங்கரிக்க கொடுத்த பொருட்களை விருப்பத்திற்கு அலங்கரித்து, ஃப்ரிட்ஜில் 3 மணி நேரம் குளிர வைத்து செட் ஆனதும் எடுத்து ஜில்லென்று பரிமாறவும்.
Tags: