கண்டதிப்பிலி பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு மற்றும் வலி நிவாரணி பண்புகள் டிக்ளோஃபெனாக் என்ற அழற்சி எதிர்ப்பு மருந்தோடு ஒப்பிடும் போது பல வாய்வழி பிரச்சினைகளுக்கு உதவுகிறது.
மேலும், திப்பிலி பழத்தில் தயார் செய்யப்படும் பேஸ்ட் பயன்படுத்தி வந்தால் பல் வலி பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.
திப்பிலி செடியின் பழங்களிலிருந்து பெறப்பட்ட அத்தியாவசிய எண்ணெய் தூக்கமின்மை போன்ற தூக்கக் பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்க பயன்படுகிறது.
திப்பிலியில் உள்ள வலி நிவாரண பண்பு, நமது உடலில் ஏற்படும் வலியைக் குறைக்கவும் தூக்கத்தைத் தூண்டவும் உதவுகிறது.
திப்பிலியின் வேரிலிருந்து கிடைக்கும் சாறு ஆண்டிஹைபர் கிளைசெமிக் மற்றும் ஆண்டிஹைபர் லிபிடெமிக் பண்பைக் கொண்டுள்ளது. இது அதன் நீரிழிவு எதிர்ப்பு பண்புகளுக்கு காரணமாகிறது.
நீரிழிவு காரணமாக ஏற்படும் கல்லீரல் மற்றும் சிறுநீரக பாதிப்புகளுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது. திப்பிலியின் தண்டுகளிலிருந்து பெறப்படும் எத்தனால் சாறு ஆன்டிபிரைடிக், வலி நிவாரணி மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அவை பாக்டீரியா போன்ற பல அந்நிய பொருட்களால் தூண்டப்படும் காய்ச்சலுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது.
திப்பிலி போன்ற சில ஆயுர்வேத மூலிகைகள் அதன் ஹெபாபுரோடெக்டிவ் நடவடிக்கை காரணமாக கல்லீரல் அழற்சி நோயை குணப்படுத்த பயன்படுகிறது.
தேவையான பொருட்கள்.:
கண்டதிப்பிலி (நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்) 10 கிராம்,
மிளகு, தனியா, கடுகு, கடலைப்பருப்பு தலா ஒரு டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் ஒன்று,
புளி சிறிய நெல்லிக்காய் அளவு,
கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சிறிதளவு,
எண்ணெய் 2 டீஸ்பூன்,
உப்பு தேவையான அளவு.
ஆரோக்கியத்தை மேம்படுத்தும் அற்புத உணவு.பாசிப்பருப்பு கூழ் !
செய்முறை.:
வாணலியில் எண்ணெய் விட்டு கண்டதிப்பிலி, மிளகு, காய்ந்த மிளகாய், தனியா, கடலை பருப்பு ஆகியவற்றை வறுக்கவும்.
உடல் கோளாறுகளை தணிக்கும் பழங்கள் !
இத னுடன் புளி, உப்பு சேர்த்து விழுதாக அரைத்து, நீர் விட்டு நன்கு கரைத்து கொதிக்க வைக்கவும். இதில் கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து கடுகு தாளித்துக் கொட்டி இறக்கவும்.
குறிப்பு.:
இந்த ரசம், உடல் வலியிலிருந்து நிவாரணம் அளிக்கும். பருப்புத் துவையல் இதற்கு சிறந்த காம்பினேஷன்.