தேவையானவை
நண்டு - ஒரு கிலோ

வெங்காயம் - கால் கிலோ

பச்சை மிளகாய் - 2

மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி

பூண்டு - 10 பல்

கொத்தமல்லித் தழை - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு

கெட்டியான தேங்காய் பால் - அரை கப்

பிரெட் தூள் - 100 கிராம்
செய்முறை :
ஸ்டஃப்டு நண்டு
முதலில் நண்டை சுத்தம் செய்து கழுவி பாத்திரத்தில் வேக வைக்கவும். பிறகு ஆற விட்டு ஓட்டில் உள்ள சதைப் பகுதியை மட்டும் எடுத்து வைக்கவும்.
நண்டின் மேல் ஓட்டை எடுத்து சுத்தம் செய்து வெந்நீரில் போட்டு சுத்தம் செய்து தண்ணீர் இல்லாமல் காய வைத்து எடுக்கவும்

ஒரு கடாயில் எண்ணெய் விட்டு பொடியாக வெட்டிய வெங்காயத் துண்டு, பச்சை மிளகாய் போட்டு வதக்கி, உப்பு, மிளகாய் தூள் போட்டு நன்றாக வதக்கவும்.

பிறகு அதில் தேங்காய் பால், நண்டின் சதைப் பகுதி ஆகியவைகளைப் போட்டு கிளறி (சுருள வதக்கக் கூடாது) எடுத்து வைக்கவும்.
காய வைத்த நண்டு ஓட்டில் சதைப் பகுதியை வைத்து திணிக்கவும். அதன் மேல் பிரெட் தூளைத் தூவி பேக் செய்யவும்.