தேவையானவை
பால் - 2 லிட்டர்
நெய் - ஒரு டேபிள் ஸ்பூன்
பொடித்த முந்திரிப் பருப்பு - ஒரு டேபிள் ஸ்பூன்
சர்க்கரை - இரண்டரை கப்
சிட்ரிக் ஆசிட் (அ) லெமன் சால்ட் - கால் டீஸ்பூன்.
செய்முறை :
முதலில் அடிகனமான பாத்திரத்தை சூடாக்கி, பாலை விட்டு சுண்டக் காய்ச்சவும்.
இதில் சர்க்கரை, சிட்ரிக் ஆசிட்டை விட்டு சிறிது நேரம் காய்ச்சவும்.
அதன் பின் முந்திரிப் பருப்பை நெய்யில் வறுத்து சேர்க்கவும்.
பால் திரிந்து அல்வா பதத்தில் வந்ததும் இறக்கவும்.