தேவையானவை
மைதா, நெய் - தலா இரண்டு கப்

சர்க்கரை - 4 கப்

ஜாதிக்காய் பொடி - கால் டீஸ்பூன்

முந்திரி பருப்பு, பிஸ்தா - தலா ஒரு டேபிள் ஸ்பூன்

ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன்.
செய்முறை :
கராச்சி அல்வா செய்வது
முதலில் சர்க்கரையை அடிகனமான கடாயில் கொட்டி, மூழ்கும் வரை தண்ணீர் விட்டு, அடுப்பில் வைத்து கம்பி பதம் வரும் வரை காய்ச்சவும்.

மைதாவை தண்ணீரில் கரைத்து சர்க்கரை பாகில் விட்டு, கட்டி தட்டாமல் சிறிது சிறிதாக நெய் விட்டுக் கிளறவும்.
அதன் பின் பாத்திரத்தில் ஒட்டாத பதம் வந்ததும், முந்திரி, பிஸ்தாவை நெய்யில் வறுத்து, ஏலக்காய்த்தூள், ஜாதிக்காய் பொடியை போட்டு இறக்கவும். 

இதை நெய் தடவிய தட்டில் கொட்டி, ஆறியதும் துண்டுகள் போடவும்.