ஆரோக்கியத்தை மேம்படுத்தும் அற்புத உணவு பாசிப்பருப்பு கூழ் !





ஆரோக்கியத்தை மேம்படுத்தும் அற்புத உணவு பாசிப்பருப்பு கூழ் !

அனைத்து வகையான பருப்பு வகைகளையும் சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் எப்போதும் அறிவுறுத்துகிறார்கள். பருப்பு வகைகள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.
பாசிப்பருப்பு கூழ் !
பிற பருப்புகளைப் போல, பயத்தம் பருப்பு, அதாவது பாசிப்பருப்பும் நம் ஆரோக்கியத்திற்கு பல வித நன்மைகளை செய்கின்றது. இதனால் நமது உடலுக்கு ஊட்டம் கிடைக்கிறது. 

புரோட்டீன், பொட்டாசியம், இரும்புச்சத்து, வைட்டமின்-பி6, நியாசின், ஃபோலேட் ஆகியவை பயத்தம் பருப்பில் காணப்படுகின்றன. 

பாசிப்பருப்பை உணவில் சேர்ப்பதன் மூலம், எடை கட்டுப்பாட்டை அடைவதுடன், வாயு பிரச்சனையும் நீங்கும். 

பாசிப்பருப்பை உட்கொள்வது மன அழுத்தம் அல்லது மன இறுக்கம் உள்ளவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. 

நீங்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப் பட்டிருந்தால், இந்த பருப்பை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வது நல்ல பலன்களைத் தரும்.தோழிகளே! 

நீங்கள் எந்த வயதினராயினும் உங்களுக்கு பலமான இடுப்பெலும்பு எப்பொழுதும் தேவை.நீங்கள் குழந்தையை பிறந்து தவழ்ந்து நடக்கையில், பூப்படைகையில், திருமணமாகி கருத்தரிக்கையில், குழந்தைக்கு தாயாகையில்,
கொரோனா நேரத்தில் பழம் மற்றும் காய்கறிகளை இப்படி சுத்தம் செய்யுங்க !
முதுமையில் முதுகு வளையாதிருக்க என எல்லா காலகட்டங்களிலும், உங்கள் உடலின் இருப்பெலும்பு ஆரோக்கிய மானதாக இருக்க வேண்டியது மிக அவசியம்.

உங்கள் இடுப்பெலும்பை பலமாக்கி, முதுகு வலியை தூரம் விரட்டும் ஒரு சிறந்த உணவுப் பொருளை பற்றி இப்பதிப்பில் படித்தறியலாமா நண்பர்களே??

தேவையானவை...

பாசிப்பருப்பு - 100 கிராம்,

பச்சரிசி - 25 கிராம்,

உளுந்து - 1 தேக்கரண்டி,

பனை வெல்லம் - 1/4 கிலோ,

நெய் - 50 கிராம்
செய்முறை..
அற்புத உணவு பாசிப்பருப்பு கூழ்
வெறும் வாணலியில், பச்சரிசியை நன்கு வறுத்துக் கொள்ளவும்.  பாசிப்பருப்பையும் உளுந்தையும் தனித்தனியாக வறுத்துக் கொள்ளவும். வறுத்த அனைத்து பொருட்களையும் மாவாக அரைத்துக் கொள்ளவும்.

வாணலியில், பாதியளவு நெய்யினைக் காய வைத்து, அரைத்த மாவுடன் கலந்து கொண்டு நன்றாக கிளறவும்.
பனை வெல்லத்துடன் சிறிது நீர் சேர்த்து, இளம் பாகாகக் காய்ச்சிக் கொள்ளவும். இந்த பாகுடன் மாவைச் சேர்த்துக் கொள்ளவும்; மீந்த நெய்யை இக்கலவையுடன் சேர்த்து அடி பிடிக்காமல் நன்றாக கிளறி இறக்கவும்

தேவையெனில் நீர் சேர்த்து கொள்ளவும்; அவ்வளவு தான் சுவையான, உடலை வலிமையாக்கும் எலும்புகளை பலப்படுத்தும் அற்புத கூழ் தயார்..!!
Tags: