வாழைத்தண்டு பெப்பர் ஜூஸ் தயார் செய்வது எப்படி?





வாழைத்தண்டு பெப்பர் ஜூஸ் தயார் செய்வது எப்படி?

என்னென்ன தேவை?

தோல் சீவி பொடியாக நறுக்கிய வாழைத்தண்டு - 1 கப்,

உப்பு - தேவைக்கு,

மோர் - 200 மி.லி.,

மிளகுத்தூள் - 1/4 டீஸ்பூன்,

கொத்தமல்லித்தழை - சிறிது,

சீரகம் - 1 டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?
வாழைத்தண்டு பெப்பர் ஜூஸ்
வாழைத்தண்டை 100 மி.லி. மோர், 100 மி.லி. தண்ணீரில் கலந்து ப்ளெண்டர் அல்லது மிக்சியில் சேர்த்து நன்கு அரைத்து வடிகட்டி, 
மீதியுள்ள மோர், மிளகுத்தூள், சீரகம், உப்பு சேர்த்து நன்கு கலந்து மேலே நறுக்கிய கொத்தமல்லித்தழையால் அலங்கரித்து பரிமாறவும்.
Tags: