கேரளா கானாங்கெளுத்தி மீன் ப்ரை செய்வது எப்படி?





கேரளா கானாங்கெளுத்தி மீன் ப்ரை செய்வது எப்படி?

கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து, மற்றும் விட்டமின் சி, விட்டமின் ஏ, விட்டமின் பி, விட்டமின் இ, போன்ற சத்துகளும் விட்டமின்களும் நிறைந்து காணப்படுகிறது. 
கேரளா கானாங்கெளுத்தி மீன் ப்ரை செய்வது எப்படி?
கானாங்கெளுத்தி மீனை குழம்பு, ப்ரை செய்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும். உடல் ஆரோக்கியத்தின் மீது அக்கறை அதிகம் உள்ளவர்கள், இந்த மீனை வாரம் ஒருமுறை உட்கொள்வது நல்லது.

இதில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட், புரோட்டீன் போன்றவை ஏராளமான அளவில் நிறைந்துள்ளது. இதனால் இது பல நன்மைகளை வாரி வழங்கும். 

இங்கு கானாங்கெளுத்தி மீனை வாரம் ஒருமுறை சாப்பிடுவதால் பெறும் நன்மைகள் கொடுக்கப் பட்டுள்ளன. கானாங்கெளுத்தி மீனில் ஒமோக-3 ஃபேட்டி அமிலம் அதிகம் உள்ளதால், இது இதய நோய்களைத் தடுக்கும். 

கானாங்கெளுத்தியில் மோனோ சாச்சுரேட்டட் ஃபேட்டி அமிலங்கள் மற்றும் பாலி அன்சாச்சுரேட்டட் ஃபேட்டி அமிலங்கள் மட்டுமின்றி, சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் குறைவாக உள்ளது. 

எனவே இம்மீனை அடிக்கடி உட்கொண்டு வர, இதய பிரச்சனைகளான பக்கவாதம், பெருந்தமனி தடிப்பு, மாரடைப்பு போன்றவை வரும் வாய்ப்பு குறையும்.
கானாங்கெளுத்தி மீனில் வளமான அளவில் நல்ல கொழுப்புக்களான மோனோ-அன்-சாச்சுரேட்டட் ஃபேட்டி அமிலங்கள் உள்ளன. இது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள உதவும். 

எனவே இதனை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், சர்க்கரை நோயின் அபாயத்தைக் குறைக்கலாம். சரி இனி கானாங்கெளுத்தி மீன் பயன்படுத்தி டேஸ்டியான கேரளா கானாங்கெளுத்தி மீன் ப்ரை செய்வது எப்படி? என்று இந்த பதிவில் கண்போம்.  

தேவையானவை:
கானாங்ககெளுத்தி மீன் - அரை கிலோ

எலுமிச்சை சாறு - ஒரு டீஸ்பூன்

மிளகாய்பொடி - ஒரு டேபிள்ஸ்பூன்

மஞ்சள் பொடி - ஒரு டீஸ்பூன்

இஞ்சி - அரை இஞ்ச் துண்டு

பூண்டு - மூன்று பல்

பச்சைமிளகாய் - 1

சின்ன வெங்காயம் - 6

கருவேப்பிலை - 5,6 இலைகள்

உப்பு தேவையான அளவு

தேங்காய் எண்ணை - வறுக்க

விருப்பபட்டால் சிறிதளவு சோம்பு சேர்க்கலாம்
செய்முறை:
கேரளா கானாங்கெளுத்தி மீன் ப்ரை செய்வது எப்படி?
மீனை சுத்தம் செய்து மேலே கீறி விடவும். மேலே சொன்ன எல்லா பொருட்களையும் (மீனை தவிர) நைசாக அரைத்துக் கொள்ளவும்.

அரைத்த மசாலாவை மீனின் கீறல்களில் படும்மாறு மேலும், உள்ளும் தேய்க்கவும். பிறகு இதை அரை மணி நேரம் பிரிட்ஜில் அல்லது வெளியில் மசாலாவில ஊற வைக்கவும்.
ஃபிரையிங் பேனை தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானவுடன் மீனை பொரித்து எடுக்கவும். எலுமிச்சை துண்டுகளை சேர்த்து பறிமாறவும். செய்து பார்த்து உங்கள் விமர்சனங்களை இங்கே தெரியப்படுத்தவும்.
Tags: