செம்பருத்திப்பூ காபி செய்வது எப்படி?

செம்பருத்திப்பூ காபி செய்வது எப்படி?

செம்பருத்திப் பூவின் மருத்துவ குணம் மகத்தானது. இதன் உண்மையான பெயர் செம்பரத்தை. ஆனால், செம்பருத்தி என்பதே நிலைத்து விட்டது. 
செம்பருத்திப்பூ காபி
இதில் ஒற்றை செம்பருத்தி, அடுக்கு செம்பருத்தி, மஞ்சள், ஆரஞ்சு, வெள்ளை செம்பருத்தி என்று இதில் பல வகைகள் உண்டு. ஆனால், ஐந்து இதழ்கள் கொண்ட செம்பருத்திப்பூ மட்டுமே மருத்துவக் குணத்துக்குரியது. 

செம்பருத்திப் பூவில் தங்கச்சத்து இருப்பதாகச் சொல்லப் படுகிறது. 6.5 கிராம் செம்பருத்திப்பூ சாப்பிட்டால், ஒரு குண்டுமணி அளவு தங்கம் சாப்பிட்ட பலன் கிடைக்கும். 

செம்பருத்திப் பூவின் மிக முக்கிய மற்றும் சிறப்பான அம்சம், இருதய நோய்க்கு இது அருமையான மருந்து. காலையில் வெறும் வயிற்றில் ஒன்றிரண்டு செம்பருத்திப் பூவின் இதழ்களை சாப்பிட்டு வந்தால் இருதய நோய் குணமாகும். 

தேவையானவை.:

செம்பருத்திப்பூ

ஏலக்காய்

கிராம்பு

மிளகு

பனங்கற்கண்டு

பால்

செய்முறை.:

செம்பருத்திப் பூவின் காம்பு, மகரந்தத் தண்டை நீக்கி விட்டு, 1 டம்ளர் நீரில் கொதிக்க வைத்து, அதனுடன் ஏலக்காய், கிராம்பு, மிளகு ஆகிய வற்றை பொடித்து, 

அதனுடன் கலந்து, கொதித்த பின் வடிகட்டி அதில் பால் மற்றும் பனங்கற்கண்டு சேர்த்தால், சுவையான செம்பருத்திப்பூ காபி தயார்.

நன்மைகள்
இந்த செம்பருத்திப்பூ காபியில் மாலிக், சிட்ரிக், டார்டாரிக் அமிலம் போன்றவை உள்ளது. 

எனவே இது ரத்தத்தைச் சுத்தமாக்கி, செரிமானத்தை மேம்படுத்தி, கெட்ட கொழுப்பைக் கரைத்து, இதயம் மற்றும் சருமத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.
செம்பருத்திப் பூவை சர்பத்தாக செய்தும் சாப்பிடலாம். சர்பத் என்றதும், பெரிய செய்முறையோ என்று யோசிக்க வேண்டாம். செம்பருத்திப்பூ இதழ்களை மையாக அரைத்து, அதோடு சீனி (சர்க்கரை), தண்ணீர் சேர்த்தால், சர்பத் தயார். 

தினமும் சர்பத் செய்ய நேரம் இல்லாதவர்கள், மொத்தமாக 40, 45 பூக்களின் இதழ்களை மட்டும் தனியாக எடுத்து சுத்தமான பாத்திரத்தில் போட்டு தண்ணி ஊற்றி கொதிக்க வைக்கவும். 

பாதியாக வற்றியதும், அடுப்பில் இருந்து இறக்கி கையால் பிசைந்து கூழாக்கி வடிகட்டி, சாறை மட்டும் எடுத்துக் கொள்ளவும். இத்துடன் 300 கிராம் சீனி (சர்க்கரை) சேர்த்துக் கலக்கி, பாகு பதம் வரும்வரை காய்ச்சி இறக்கவும். 

சூடு ஆறியதும், ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொள்ளவும். தேவைப்படும் போது 2 டீஸ்பூன் எடுத்து ஒரு டம்ளர் தண்ணீர் அல்லது பாலில் கலந்து குடிக்கலாம்.
Tags: