நெல்லிக்காய் இட்லி செய்வது எப்படி?





நெல்லிக்காய் இட்லி செய்வது எப்படி?

நெல்லிக்காய் ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்கும். உடம்பில் இருக்கிற ரணங்களை சீக்கிரமாக ஆற்றும். வயிற்றுப் புண்களைக் குணமாக்கும். இதயத்துக்கும் நல்லது. 
நோய்த்தொற்றுகள் வராமல் காக்கும். நம் உடம்பில் வளர்சிதை மாற்றம் நிகழும் போது ஒவ்வொரு செல்லில் இருந்தும் கழிவுகள் வெளியேறும். 

இந்தக் கழிவுகள் வெளியேறவில்லை என்றால், உடலில் வீக்கம் ஏற்படுவதில் ஆரம்பித்து புற்றுநோய் வரை வருவதற்கு வாய்ப்பிருக்கிறது. 

பெரிய நெல்லிக்காயில் உள்ள பாலிபினால், டேனின், ஃப்ளேவினாய்ட்ஸ் போன்றவை நோய் எதிர்ப்பு சக்தியைத் தந்து மேலே சொன்ன பிரச்னைகள் வராமல் தடுப்பவை. 

பெரிய நெல்லிக்காய் சாப்பிட்டால் சளி பிடிக்கும் என்று பெரும்பாலோனோர் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் இதில் இருக்கிற நோய் எதிர்ப்பு சக்தி நம் உடம்பில் இருக்கிற கபத்தை வெளியேற்றும். 

அதைத் தான் நாம் சளி பிடித்துக் கொண்டதாக நினைக்கிறோம். ஆனால், இரவு நேரத்தில் நெல்லிக்காய் சாப்பிட்டால் தொண்டை கரகரப்பு ஏற்படும்.
தேவையானவை:

இட்லி மாவு - ஒரு கிலோ

நெல்லிக்காய் - 6

தேன் - 2 டீஸ்பூன்
திணை இனிப்பு பொங்கல் செய்வது எப்படி?
செய்முறை:

நெல்லிக்காயை துருவியோ அல்லது மிக்ஸியில் அரைத்தோ இட்லி மாவுடன் கலக்கவும். தேன் சேர்த்து இட்லித் தட்டில் வேக வைக்கவும்.
Tags: