கறி லீஃப் பிரான் செய்வது எப்படி?





கறி லீஃப் பிரான் செய்வது எப்படி?

இறால் மீனில் உள்ள சத்துக்கள் அபரிமிதமானவை.. கனிமச்சத்தின் அளவு அதிகமாக உள்ளது. ஹீமோகுளோபினில் ஆக்ஸிஜன் கலக்கும் செயலில் முக்கிய பங்கு வகிக்கிறது இந்த கனிமம்.
கறி லீஃப் பிரான் செய்வது
கூடுதல் இரும்புச்சத்து உடம்பில் ஏறும் போது, தசைகளுக்கு கூடுதல் அளவிலான ஆக்ஸிஜன் செல்லக்கூடும். 

இறால் மீனை குழந்தைகள் சாப்பிட்டு வந்தால், மூளைக்கு செல்லும் ஆக்ஸிஜனின் அளவும் அதிகரித்து ஞாபக சக்தி அதிகரிக்கும். இறாலில் அயோடின் சத்து நிறைய உள்ளதால், உடலில் தைராய்டு ஹார்மோன்கள் சுரக்க பேருதவி புரிகின்றன. 
இந்த ஹார்மோன்கள் குழந்தை பருவத்திலும், கர்ப்பமாக இருக்கும் நேரத்திலும், மூளையின் வளர்ச்சிக்காக தேவைப்படுகிறது. 

இறாலில் புரதம், கால்சியம், பொட்டாசியம் மற்றும் பல வைட்டமின்கள் உள்ளன. பல வகை புற்றுநோய்களில் இருந்து காப்பதுடன், நுரையீரல் புற்றுநோய்க்கு எதிராக போராடும்.
தேவையானவை:

பிரான் (இறால்) - 15 பீஸ்

உப்பு - தேவையான அளவு

வெள்ளை மிளகுத்தூள் - கால் டீஸ்பூன்

சர்க்கரை - கால் டீஸ்பூன்

வெண்ணெய் - 1 டீஸ்பூன்

எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் + தேவையான அளவு (பொரிக்க)

கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி

பூண்டு - 1 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)

சில்லி பேஸ்ட் - 1 டீஸ்பூன்

தேன் - 1 டீஸ்பூன்

சோயா சாஸ் - அரை டீஸ்பூன்

கார்ன் ஃப்ளேக்ஸ் - 50 கிராம் (நொறுக்கியது)

பேட்டர் செய்ய:

கார்ன்ஃப்ளார் - 2 டேபிள் ஸ்பூன்

மைதா - 1 டேபிள் ஸ்பூன்

சர்க்கரை, உப்பு, வெள்ளை மிளகுத்தூள் - தலா ஒரு சிட்டிகை
செய்முறை:

பேட்டர் செய்ய கொடுத்தவற்றை ஒரு பவுலில் சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றிப் பிசைந்து வைக்கவும். இறாலைக் கழுவி சுத்தம் செய்து, அதன் நடுவே நன்கு கீறி விடவும், 

ஆனால், இறாலை இரண்டாகப் பிளக்கக் கூடாது. இறாலை ஒவ்வொரு பீஸாக எடுத்து பேட்டரில் புரட்டி எடுத்து நொறுக்கிய கார்ன் ஃப்ளேக்ஸில் போட்டு புரட்டவும். 

இப்படி அனைத்து பீஸ்களையும் கார்ன்ஃப்ளாரில் புரட்டி தனியாக வைக்கவும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி, மிதமான சூட்டுக்கு வந்ததும் இறாலைப் போட்டுப் பொரித்து எடுக்கவும். 

மற்றொரு கடாயில் எண்ணெய், வெண்ணெய் ஊற்றி, பூண்டு சேர்த்து வதக்கவும். 

இதில் கறிவேப்பிலை சேர்த்துப் பொரிந்ததும் தண்ணீர் ஊற்றி சில்லி பேஸ்ட், உப்பு, சர்க்கரை, வெள்ளை மிளகுத்தூள், சோயா சாஸ் ஊற்றி சாஸ் பதத்துக்குக் கொதித்ததும் அதில் பொரித்த இறாலைச் சேர்த்துப் புரட்டி தேன் ஊற்றிப் பரிமாறவும். 
இறாலை மட்டும் பொரித்தெடுத்து கறிவேப்பிலையை எண்ணெயில் பொரித்து, மேலே தூவியும் சாப்பிடலாம். இதை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.
Tags: