வறுத்தரைத்த மோர் குழம்பு செய்முறை !





வறுத்தரைத்த மோர் குழம்பு செய்முறை !

தேவையானவை:
குடமிளகாய்- 1

கத்திரிக்காய்- 2

வெண்டைக்காய்- 6

தயிர்- 1 டம்ளர்

உப்பு- தேவையான அளவு

மஞ்சள் தூள்- 1/2 தேக்கரண்டி

வறுத்தரைக்க:

கடலைப்பருப்பு- 1 தேக்கரண்டி

துவரம்பருப்பு- 1 தேக்கரண்டி

தனியா- 2 தேக்கரண்டி

வெந்தயம்- 1 தேக்கரண்டி

இஞ்சி- 1 துண்டு

மிளகாய்வற்றல்- 4

தேங்காய்- கால் மூடி

தாளிக்க:

எண்ணெய்- 1 தேக்கரண்டி

கடுகு- 2 தேக்கரண்டி

செய்முறை:

1. ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு வறுக்க வேண்டிய பொருட்களை வதக்கி(தேங்காய் தவிர) ஆற விட்டு மின்னரைப்பானில் அரைக்கவும்.
வறுத்தரைத்த மோர் குழம்பு

தேங்காயைப் பச்சையாகப் போடாமல் வறுத்தும் போடாமல் வறுத்தப் பொருட்களை ஆற விடும் போது அந்த சூட்டிலேயே போட வேண்டும்.

ஆறியதும் அரைக்க வேண்டும். நன்றாக அரைத்ததும் தயிரையும் மின்னரைப்பானில் போட்டு ஒரு சுற்றுக்கு அரைக்க வேண்டும்.

2. ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு குடமிளகாய், கத்திரிக்காய், வெண்டைக்காயைப் போட்டு ஐந்து நிமிடங்களுக்கு வதக்க வேண்டும்.

3. பிறகு தண்ணீர் விட்டு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து காய்களை வேக விட வேண்டும்.

4. வறுத்து அரைக்க வேண்டியதை அரைத்து காய் வெந்ததும் அரைத்தக் கலவையைப் போட வேண்டும். அடுப்பைக் குறைந்த தீயில் வைக்கவும்.

5. தயிர் விட்டதால் அதிக நேரம் கொதிக்க விடக் கூடாது. ஒரு பத்து நிமிடங்கள் குழம்பு கொதித்ததும்

தனியே ஒரு பாத்திரத்தில் எண்ணெயிட்டு கடுகு, கறிவேப்பிலை போட்டுத் தாளிக்க வேண்டும். தாளித்ததைக் குழம்பில் கொட்டி இறக்க வேண்டும். 

மோர்க்குழம்பிற்கு பீன்ஸ் அல்லது அவரைக்காய் பருப்புசிலி அருமையான இணை.
Tags: