எந்தப் பழத்தில் சத்து உள்ளது?





எந்தப் பழத்தில் சத்து உள்ளது?

இயற்கை மருத்துவம் மற்றும் யோகா நிபுணரான ஷர்மிளா: உடலுக்குத் தேவையான ஒவ்வொரு சத்துக்கும், தனித்தனியாக ஏதாவது ஒன்றை சாப்பிடுவதை விட, பழங்களைச் சாப்பிடுவது புத்திசாலித்தனம். 
பழத்தில் சத்து
அந்தளவிற்கு, பழங்களில் நிறைய சத்துக்கள் உள்ளன; ஆப்பிளை விட, பப்பாளிக்குத் தான் பல மடங்கு சத்து உண்டு. 

பெரும்பாலும் ஒவ்வொரு நாட்டிற்கும், அதன் தட்பவெப்பம், அந்த மக்களின் உடல் தேவைக்கு ஏற்ற சத்துள்ள பொருட்களையே, அந்த மண் விளைவிக்கிறது. 
அந்த வகையில், நம் தோட்டத்தில் விளையும் பப்பாளி, மிகச்சிறந்த பழம். "பப்பாளி சூடு' என, ஒதுக்குவர்; ஆனால், அதை சாப்பிட்டு, அரை டம்ளர் பால் குடித்தால், சூடு பிரச்னை வராது. 

பழச்சாறு குடிப்பதை விட, பழமாகச் சாப்பிடும் போது தான், அதில் உள்ள நார்ச்சத்து, நம் உடலுக்குள் செல்லும். 

உணவுக்கு முன் அல்லது உணவுக்குப் பின் பழங்களை சாப்பிடுவதை விட,பழத்தையே உணவாக எடுத்துக் கொள்ளும் போது, உடலில் சேர்ந்துள்ள, நச்சுப் பொருட்களை எல்லாம் கழிவாக வெளியேற்றி விடும். 
பாதிக்கும் மேற்பட்ட பழங்களில், தோலில் தான் சத்துக்கள் உள்ளன. தோல்களை தூக்கிப் போட்டு விட்டு, பழங்களை மட்டும் உண்ணும் போது, அதன் பலன் குறைகிறது. 
பழத்தில் சத்து
முன்பெல்லாம், வாழைப்பழத் தோலில் உள்ள நார் போன்ற பகுதியையும், சுரண்டிச் சாப்பிடுவர். வாழைப்பழம் தரும் சத்தின் பாதி, அந்தத் தோலில் தான் உள்ளது என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். 

ஆனால், இப்போது, விவசாயத்தில் ரசாயனங்கள் அதிகளவு பயன்படுத்தப் படுவதால், தோலை விலக்குவது அவசியம். 

எந்தப் பழமானாலும், அதைக் கழுவி, மிதமான சூட்டில் உள்ள தண்ணீரில் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு, ஒரு ஸ்பூன் வினிகர், இரண்டு ஸ்பூன் உப்பு கலந்த தண்ணீரில் கழுவிச் சாப்பிடுவது நல்லது. 
அதே சமயம், இயற்கை முறையில் விளைந்த திராட்சை, நாட்டுப் பழங்கள், மலைப்பழங்கள், மாம்பழம், சப்போட்டா, நெல்லி, கொய்யா போன்ற பழங்களை தோலுடன் சாப்பிடலாம்.

மாம்பழத்தில் வைட்டமின் ஏ சத்து அதிகம். வைட்டமின் பி, சி மற்றும் இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ் ஆகிய தாதுப் பொருட்களும் உள்ளன.

மாம்பழத்தில் மார்பக ரத்தப் புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல் உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. நம் நோய் எதிர்ப்பு மண்டலம் மேம்பட இது உதவுகிறது.

ஆரஞ்சுப்பழத்தில் வைட்டமின் ஏ உள்ளது. வைட்டமின் சி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய தாதுப்பொருள்களும் உள்ளன. 

வைட்டமின் ஏ குறைவினால் பார்வைக் கோளாறு, மாலைக்கண் நோய் ஏற்படும். மற்ற சிட்ரஸ் பழங்களைப்போல் இதிலும் வைட்டமின் சி நிறைவாக உள்ளது.
Tags: