டேஸ்டியான மிக்ஸ்டு வெஜ் இட்லி செய்வது எப்படி?

டேஸ்டியான மிக்ஸ்டு வெஜ் இட்லி செய்வது எப்படி?

அசைவ உணவு என்பது இன்று பலரால் விரும்பப்படும் உணவாகி விட்டது. மூன்று வேலை முதல் ஆறு வேளை வரை கூட அன்றாடம் அசைவ உணவினை மட்டுமே உண்பவர்கள் ஏராளம். 
டேஸ்டியான மிக்ஸ்டு வெஜ் இட்லி செய்வது எப்படி?
காய்கறி, பழ உணவுகளை கண்ணால் காண்பதனைக் கூட மிகப் பெரிய தவறாக இவர்கள் கருதுவார்கள். இத்தகையோரிடம் காய்கறி உணவினை வலியுறுத்துவது கடினமான செயல் ஆகி விடுகின்றது. 

காய்கறி, பழங்களின் பலனைப் பெற அசைவ உணவினை கைவிட முடியா விட்டாலும் தாவர வகைகளை உணவில் சேர்த்துக் கொண்டாலே பல நன்மைகளை பெற்று விடலாம்.

மாமிச உணவு வகைகளை அதிகம் உண்பதை விட, காய்கறிகளை அதிகம் சேர்த்துக் கொண்டாலே எந்த ஒரு நோயும் நமக்கு ஏற்படுவதில்லை என்பதை அப்போதே நமக்கு உணர்த்திய நம் முன்னோர்களை சற்று மறந்தே தான் போய் விட்டோம். 

விலை அதிகமுள்ள காய்கறி மற்றும் பழங்களை விட, நாம் அலட்சியமாக நினைக்கும் சர்வ சாதாரணமாக கிடைக்கக்கூடிய சில காய்கறி வகைகள் நமக்கு தீவிரமான பல நோய்களை கட்டுபடுத்துகிறது.
தேவையான பொருட்கள்
இட்லி மாவு - 2 கப்

பொடியாக நறுக்கிய கேரட் - 50 கிராம்

பொடியாக நறுக்கிய முட்டைக்கோஸ் - 50 கிராம்

பொடியாக நறுக்கிய பீன்ஸ் - 50 கிராம்

பொடியாக நறுக்கிய வெங்காயம் -50 கிராம்

மிளகுத்தூள் - 2 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

நறுக்கிய மல்லித்தழை - சிறிதளவு

எண்ணெய் -2 டீஸ்பூன்

கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்

உளுந்தம்பருப்பு - 1/2 டீஸ்பூன்.

செய்முறை
கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானதும் கடலைப்பருப்பு, உளுந்தம் பருப்பைச் சேர்த்து வதக்கவும். பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், கேரட், முட்டைகோஸ், பீன்ஸை சேர்த்து வதக்கவும். 

பொடியாக நறுக்கிய மல்லித் தழையைச் சேர்த்து வதக்கவும். தேவையான உப்பு, மிளகுத்தூளைச் சேர்த்து பிரட்டவும். வதக்கிய கலவையை இட்லி மாவுடன் சேர்த்து மிக்ஸ் செய்யவும். 

இட்லி தட்டில் கரைத்த வெஜிடபிள் இட்லி மாவைச் சேர்த்து மிருதுவாக வேக வைத்து இறக்கவும். சுவையான தக்காளி (அ) மல்லிச் சட்னியுடன் பேக் செய்து தரவும்.
குறிப்பு

இட்லி தட்டில் அரைக்கரண்டி மாவைச் சேர்த்து அதன் மேல் வதக்கிய காய்களைச் சேர்க்கவும். வதக்கிய காய் மேல் அரைக்கரண்டி மாவைச் சேர்த்தும் சுவையான மிக்ஸ்டு வெஜ் இட்லியைச் செய்யலாம்.
Tags: