கொலஸ்டிரால் என்றாலே கெட்டது என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். உடல் இயங்க கொலஸ்டிரால் அவசியம். 
நல்ல கொழுப்பை அதிகரிக்கும் வழிகள்

அதிலும் எச்.டி.எல் எனப்படும் நல்ல கொழுப்பு இதய நோய் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளிலிருந்து தப்பிக்க அவசியம்.

எச்.டி.எல் என்பது நம்முடைய ரத்தத்தில் உள்ள வேக்குவம் க்ளீனர் போன்ற ஒரு சுத்தப்படுத்தியாகும். 

இதன் அளவு அதிகரிக்கும் போது கூடுதல் கொழுப்பைக் குறைக்கிறது, ரத்த நாளங்களில் படிந்துள்ள கொழுப்பு படிமங்களை நீக்கி கல்லீரலுக்கு அனுப்பி வெளியேற்றுகிறது. 

கல்லீரல் அதை வெளியேற்றுவதன் மூலம் இதய நோய், மாரடைப்பு, பக்கவாதம் வருவதற்கான வாய்ப்பு குறைகிறது.
நல்ல கொழுப்பு என்பது ஒரு டெசிலிட்டருக்கு 60 மில்லி கிராம் என்ற அளவில் இருக்க வேண்டும். குறைந்த பட்சம் 40 முதல் 60 என்ற அளவுக்குள் இருக்கும் வகையில் பார்த்துக் கொள்வது நல்லது.

உடல் பருமன், உடல் உழைப்பு இல்லாத வாழ்க்கை முறை, டைப் 2 சர்க்கரை நோய், உடலில் வீக்கங்கள், புகைப்பழக்கம் ஆகியவை எச்.டி.எல் அளவை குறைக்கும் காரணிகள் ஆகும். 

எனவே, இதில் இதைத் தவிர்ப்பது, கட்டுக்குள் வைப்பது அவசியம். எல்.டி.எல் என்ற கெட்ட கொழுப்பு குறைவாக இருக்கவும் எச்.டி.எல் என்ற நல்ல கொழுப்பு அதிகமாக இருக்கவும் நாம் உட்கொள்ளும் உணவும் காரணம். 

எனவே, ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஆலிவ் எண்ணெய்
ஆலிவ் எண்ணெய்

ஆலிவ் எண்ணெய்யில் உடல் செல்களில் ஏற்படும் வீக்கத்தை தடுக்கு; தன்மை உள்ளது. 
எனவே, காய்கறி சாலட் செய்து அதில் சிறிது ஆலிவ் எண்ணெய் ஊற்றி சாப்பிடலாம். அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

முழு தானியங்கள்
முழு தானியங்கள்
முழு தானியங்கள், பழுப்பு, சிவப்பு அரிசி ரத்தத்தில் எல்.டி.எல் அளவைக் குறைக்கும் தன்மை கொண்டவை. 

இந்த உணவுகளில் உள்ள நார்ச்சத்து குறிப்பாக கரையக்கூடிய நார்ச்சத்து எல்.டி.எல் அளவைக் குறைக்க உதவுகிறது. எனவே, தினசரி உணவில் முழு தானியங்கள் எடுத்துக் கொள்ளலாம். 

நன்கு தீட்டப்பட்ட வெண்மையான அரிசிக்கு பதில் பழுப்பு, சிவப்பு அரிசியை பயன்படுத்துவது ஆரோக்கியத்தைத் தரும்.

நார்ச்சத்து உணவுகள்
நார்ச்சத்து உணவுகள்

ஏற்கனவே குறிப்பிட்டது போல் நார்ச்சத்து உள்ள உணவுகள் எல்.டி.எல் அளவைக் குறைக்க உதவுகின்றன. 
எனவே, தினசரி உணவில் ஆப்பில், பேரிக்காய், தக்காளி, வெங்காயம், வெள்ளரி உள்ளிட்டவற்றை சேர்த்துக் கொள்வது நல்லது.

அவகேடோ
அவகேடோ

நம் ஊரில் இது புதிய பழம். இதில் அதிக அளவில் ஃபேலட் என்ற வைட்டமினும் மோனோ சாச்சுரேட்டட் கொழுப்பும் உள்ளது. இது உடலுக்கு ஆரோக்கியமான கொழுப்பு வகையாகும். 

இது எல்.டி.எல் அளவைக் குறைக்க உதவுகிறது. மேலும் இதில் உள்ள நார்ச்சத்து ஆரோக்கியமான கொழுப்பு அளவை பராமரிக்க உதவுகிறது.