துவரம் பருப்பு இட்லி உப்புமா செய்வது எப்படி?

துவரம் பருப்பு இட்லி உப்புமா செய்வது எப்படி?

இட்லிக்கு அரிசி ஊற வைக்கும் போது, இந்த 2 டிப்ஸ்களையும் மறக்காமல் ஃபாலோ பண்ணுங்க.. இட்லி, தோசை புஸ்புஸ்ஸுனு வரும். இதோ குட்டி டிப்ஸ். 
துவரம் பருப்பு இட்லி உப்புமா செய்வது எப்படி?
இட்லிக்கு மாவு அரைக்கும் போது அரிசிக்கு பதிலாக சத்து நிறைந்த தானியங்களை பயன்படுத்தலாம். கேழ்வரகு, ஓட்ஸ், கொள்ளு போன்றவற்றை சேர்த்து இட்லிக்கு மாவு அரைக்கலாம். 

பாசிப்பருப்பு சேர்த்து அரைத்தாலும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும். எடையை குறைக்க முயற்சிப்பவர்கள், இந்த பாசி பருப்பினை தவற விடக்கூடாது. 
இட்லிக்கு மாவு அரைக்கும் போது, சாதாரண உளுந்துக்கு பதில், கருப்பு உளுந்து பயன்படுத்தினால் அதிக நன்மை கிடைக்கும். 

இட்லி மென்மையாக வர வேண்டுமானால், மாவு அரைக்கும் பக்குவம் கவனிக்க வேண்டிய ஒன்றாகும். இட்லிக்கு மாவு அரைக்கும் போது தண்ணீர் அதிகமாகி விடக்கூடாது. 

அதே போல மாவு கெட்டியாகி விடக்கூடாது. அதேபோல உளுந்து அதிகமாகி விடவும் கூடாது, குறைவாகி விடவும் கூடாது, இதனால், இட்லி கெட்டியாகி விடும்.
தேவையான பொருட்கள் :
இட்லி அரிசி - 1 கப்,

துவரம்பருப்பு - 1 கப்,

உப்பு - தேவைக்கு,

சோடா உப்பு - 1 சிட்டிகை,

மோர் மிளகாய் - 3,

காய்ந்தமிளகாய் - 3.

தாளிக்க...

எண்ணெய் - தேவைக்கு,

கடுகு - 1 டீஸ்பூன்,

கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன்,

உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன்,

கறிவேப்பிலை - 1 கொத்து.
செய்முறை :
துவரம் பருப்பு இட்லி உப்புமா
இட்லி அரிசியையும், துவரம் பருப்பையும் 4 மணி நேரம் ஊற வைத்து, உப்பு சேர்த்து கொர கொரப்பாக இட்லி மாவு பதத்திற்கு அரைத்து 8 மணி நேரம் வரை புளிக்க வைத்து சோடா உப்பு சேர்த்து கலக்கவும்.
இட்லி தட்டில் எண்ணெய் தேய்த்து, மாவை ஊற்றி 15 நிமிடம் வேக வைக்கவும். இட்லிகள் நன்கு ஆறியதும் உதிர்த்துக் கொள்ளவும்.

கடாயில் எண்ணெயை காய வைத்து மோர் மிளகாய், காய்ந்த மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வறுத்து, ஆறியதும் கொர கொரப்பாக கையால் பொடித்து கொள்ளவும்.

பிறகு அதே கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்து, 1/4 கப் தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து கொதி வந்ததும் உதிர்த்த இட்லிகளை சேர்க்கவும். 
இட்லி உதிரியாக வரும் வரை மிதமான தீயில் வைத்து கிளறவும். கடைசியாக இறக்கும் போது கொர கொரப்பாக பொடித்த மோர் மிளகாய், காய்ந்த மிளகாயை போட்டு கிளறி பரிமாறவும். 

சூப்பரான சூப்பரான துவரம் பருப்பு இட்லி உப்புமா ரெடி.
Tags: