திருவையாறு அசோகா அல்வா செய்வது எப்படி?

திருவையாறு அசோகா அல்வா செய்வது எப்படி?

அல்வா என்றதும் முதலில் அனைவருக்கும் நினைவில் வருவது திருநெல்வேலி. இதற்கு அடுத்தப் படியாக தஞ்சாவூர் மற்றும் திருவையாறு பகுதியில் கிடைக்கும் அசோகா அல்வா பலருக்கும் பிடித்தமான அல்வாவாக உள்ளது. 
திருவையாறு அசோகா அல்வா செய்வது எப்படி?
இதன் சுவை, மணம் மற்றும் நிறத்தை பார்க்கும் போதே நாவில் எச்சில் ஊறும். ஒருமுறை சுவைத்தால் அதன் ருசி நாக்கை விட்டு எளிதில் அகலாது. 

வாழை இலையில் ஆவி பறக்க கையில் கொடுக்கப்படும் அசோகா அல்வாவின் சுவைக்கு மற்றொரு காரணம் காவிரி ஆற்றின் தண்ணீர்.

திருநெல்வேலி அல்வா கோதுமை சம்பாவில் செய்யப்படுவது போல, அசோகா அல்வா பாசிப்பருப்பில் செய்யப் படுகிறது. அதே போல் இதில் அதிக சர்க்கரை மற்றும் நெய் சேர்க்கப்படாமலே அபரிவிதமான சுவை கிடைக்கிறது.  

மற்ற எல்லா அல்வா செய்முறையைக் காட்டிலும் அசோகா அல்வா செய்வது மிக மிக சுலபம். குறைவான பொருட்கள் மட்டுமே இதற்கு தேவைப்படுகிறது. 

வீட்டிலேயே அசோகா அல்வா செய்ய நினைப்பவர்களுக்கு அதன் செய்முறையை இங்கு பகிர்கிறோம்.

என்னென்ன தேவை?

சம்பா கோதுமை - 1 கப்

பாசிப் பருப்பு - 1 கப்

சர்க்கரை - 3 கப்

நெய் - தேவையான அளவு

முந்திரி - 10

எப்படிச் செய்வது?
திருவையாறு அசோகா அல்வா
கோதுமை, பாசிப் பருப்பு இரண்டையும் தனித்தனியாகப் பொன்னிறமாக வறுத்து, கொர கொரப்பாகப் பொடித்து கொள்ளுங்கள். அவற்றை நெய் விட்டு நன்றாக வறுத்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு அடி கனமாக உள்ள பாத்திரத்தில் ஒரு கப்புக்கு இரண்டு கப் தண்ணீர் வீதம் விட்டு நன்றாகக் கொதிக்க வையுங்கள். மாவு வகைகளைக் கொதிக்கும் தண்ணீரில் சீராகக் கொட்டிக் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.
இந்தக் கலவை வெந்தவுடன் சர்க்கரை சேர்த்து நன்றாகக் கிளறி நெய்யை ஊற்றுங்கள். இந்தக் கலவை நன்றாக வெந்து, ஊற்றிய நெய் மேலே வரும்வரை கிளறி விட்டு இறக்கி விடுங்கள்.

சிவப்பு நிறம் வர வேண்டும் என்றால் கொஞ்சம் கேசரி பவுடரைச் சேர்த்து கொள்ளலாம். முந்திரியை நெய்யில் வறுத்துச் சேர்த்தால் திருவையாறு அசோகா அல்வா தயார்.

நீங்களும் இந்த செய்முறையைப் பின்பற்றி வீட்டிலேயே அசோகா அல்வா செய்து பாருங்கள். அனைவருக்கும் மிகவும் பிடிக்கும்.
Tags: