கொரோனா மற்றும் காசநோய் - இரண்டிற்கும் உள்ள ஒற்றுமை தெரியுமா?





கொரோனா மற்றும் காசநோய் - இரண்டிற்கும் உள்ள ஒற்றுமை தெரியுமா?

இந்தியாவில் காசநோய் மற்றும் மருந்து எதிர்ப்பு காசநோய் பாதிக்கப்பட்ட வழக்குகள் அதிகமாக உள்ளன. "காசநோய் அற்ற இந்தியா" என்ற பிரச்சாரம் மார்ச் 13, 2018 ஆம் ஆண்டு டெல்லியில் தொடங்கியது.
கொரோனா மற்றும் காசநோய் - இரண்டிற்கும் உள்ள ஒற்றுமை

2025 ஆம் ஆண்டிற்குள் காசநோய் இந்தியாவில் இருந்து முற்றிலும் ஒழிக்கப்படும் என்ற கருத்தை இது முன் வைத்துள்ளது.

சி.எம்.ஏ.ஏ.ஓ, எச்.சி.எஃப்.ஐ மற்றும் கடந்த ஐ.எம்.ஏ முன்னாள் தலைவர் டாக்டர் கே.கே. அகர்வால், "இன்று, உலகளாவிய கவனம், கோவிட் -19 ஐ நோக்கி நகர்த்தப் படுவதால்,
நொறுங்கும் எலும்புகள் - ஆஸ்டியோ போரோசிஸ் !
காசநோய் போன்ற பிற நோய்கள் பின்னுக்கு தள்ளப்படும் அபாயத்தை பெறுகின்றன" என்று கூறுகிறார். காசநோயை உலகத்தில் இருந்து 2030 ஆம் ஆண்டிற்குள் விரட்ட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரே அறிகுறிகள்

கோவிட் -19 ஒரு வழியில் காசநோயைக் கட்டுப்படுத்தும் வழியை காட்டுகிறது. காசநோயை முற்றிலும் ஒழிக்க முக்கிய வழி அதனைத் தடுப்பது மட்டுமே என்று அகர்வால் குறிப்பிடுகிறார்.

கொரோனா மற்றும் காசநோய் ஆகிய இரண்டும் இருமல், காய்ச்சல், மூச்சுத்திணறல் போன்ற ஒரே அறிகுறிகளைக் கொண்டுள்ளன. ஆகவே இருமல் பாதிக்கப்பட்ட நோயாளிகளை புறக்கணிக்கக் கூடாது.

காசநோய் குறித்து உலக சுகாதார நிறுவனம் குறிப்பிடும் பரிந்துரைகள்
அறிகுறிகள்
சுவாசம் தொடர்பான அறிகுறிகள் கொண்ட ஒவ்வொரு நபருக்கும் கொரோனா மற்றும் காசநோய் ஆகிய இரண்டு நிலைகளுக் கான பரிசோதனைகள் செய்யப்பட வேண்டும் என்று 

உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கிறது. காசநோய் என்பது காற்று வழியாக பரவும் தொற்று பாதிப்பாகும்.

காசநோய் ஒரு தொற்றுநோய்

காசநோய் பாதித்தவர்கள் திறந்த வெளியில் இருப்பதால் அருகில் இருப்பவர்களு க்கும் காசநோய் பரவும் வாய்ப்பு அதிகரிக்கிறது.

மிக அதிக நெரிசல் இருக்கும் இடங்களில் நோய் பரவும் அபாயம் குறிப்பாக அதிகம் உள்ளது. இந்த நோய் எவரையும் தாக்கக்கூடும்.

சமூக விலகல் இரண்டிற்கும் பொதுவானது
காசநோய் ஒரு தொற்றுநோய்

நோய் பரவாமல் இருக்க தடுப்பு நடவடிக்கைகள் மிகவும் அவசியம் என்று மருத்துவர் அகர்வால் கூறுகிறார். 

அடிப்படை தொற்று தடுப்பு மற்றும் கட்டுப்பாடு, கை சுகாதாரம், இருமல் இங்கிதங்கள் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் இரண்டு நிலைகளுக்கும் பொதுவாக பின்பற்றப்பட வேண்டியவை.

காசநோய் பாதித்தவர் களுடன் நெருங்கி பழகுவது மிகவும் ஆபத்தானது. கொரோனாவைப் போலவே காசநோய் பாதித்தவர் களையும் தனிமைப் படுத்தி சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.
எந்த வயதில் பசும்பால் கொடுக்கலாம் !
HIV பாதித்தவர்கள், குறைவான நோயெதிர்ப்பு சக்தி கொண்ட மற்ற நோயாளிகள் அல்லது கூட்டம் அதிகமாக இருக்கும் இடத்தில் வசிப்பவர்கள் போன்றவர் களுக்கு இதன் அபாயம் அதிகரிக்கும் வாய்ப்பு உண்டு.

இதே மக்களுக்கு கொரோனா தாக்கும் அபாயமும் அதிகம். ஒருவேளை இவர்கள் இந்த நிலைகளால் பாதிக்கப்பட்டால் தீவிர நோய் வளர்ச்சிக்கான அபாயம் உள்ளது.

காசநோய் பாதிக்கப்பட்ட நோயாளிகளை கண்டு பிடிப்பது, அதன் பரவலைக் குறைக்கும். இதனால் காசநோய் பாதித்தவர்கள் எண்ணிக்கை குறையலாம்.

அனைத்து காசநோய் பாதித்தவர்கள் குறிப்பாக தீவிர காசநோய் உள்ளவர்கள் மற்றும் மருந்து எதிர்ப்பு காசநோய் உள்ளவர்கள் 14 நாட்கள் தனிமைப் படுத்தப்பட வேண்டும்.

பொதுமக்கள் விழிப்புணர்ச்சி
பொதுமக்கள் விழிப்புணர்ச்சி

காசநோய் பாதித்த ஒவ்வொரு நபரும் குறிக்கப்பட்டு, அவர்களுடைய சிகிச்சை முறைகள் சரியான முறையில் பின்பற்றப்பட வேண்டும். 

கொரோனா வைரஸ் போல் காசநோய் குறித்த விழிப்புணர்ச்சி அடிமட்ட அளவில் இருந்து மக்களுக்கு அறிவுறுத்தப்பட வேண்டும்.

கொரோனாவைத் தடுக்க மேற்கொள்ளப் பட்டிருக்கும் சமூக விலகல் என்னும் தடுப்பு நடவடிக்கை காச நோய்க்கான சிகிச்சைக்கு இடையூறாக இருக்கலாம்.
பெண்கள் எப்போது உறவு கொள்ள விரும்புகிறார்கள்?
காசநோய் எதிர்ப்பு சிகிச்சைக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது என்று அரசு உறுதி கூற வேண்டும். காசநோய் என்பது சிகிச்சை அளிக்கக்கூடிய ஒரு பாதிப்பாகும்.

ஆனால் சிகிச்சையில் ஏற்படும் எந்த ஒரு இடையூறும், மருந்து எதிர்ப்பு காசநோய் பாதிப்பை உண்டாக்கக்கூடும்.
Tags: