உருளைக்கிழங்கு பஜ்ஜி செய்வது எப்படி?





உருளைக்கிழங்கு பஜ்ஜி செய்வது எப்படி?

தேவையான பொருட்கள் :
உருளைக்கிழங்கு - 3

கடலை மாவு - 1 1/2 கப்

தண்ணீர் - 1 கப்

மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்

பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை

பேக்கிங் சோடா - 2 சிட்டிகை

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை :
உருளைக்கிழங்கு பஜ்ஜி செய்வது
உருளைக்கிழங்கை தோலுரித்து, உப்பு கலந்த நீரில் போட்டு, 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின்னர் நீரை முற்றிலும் வடித்து விட்டு, அதனை வட்டமாக நறுக்கி கொள்ள வேண்டும்.
ஒரு பொளலில் கடலை மாவு, மிளகாய் தூள், கரம் மசாலா, பேக்கிங் சோடா, பெருங்காயத் தூள் மற்றும் உப்பு சேர்த்து கிளறி, சிறிது தண்ணீர் ஊற்றி, பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், 
உருளைக்கிழங்கை ஒவ்வொரு துண்டாக எடுத்து, கலந்து வைத்துள்ள பஜ்ஜி மாவில் நன்கு பிரட்டி, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
Tags: