மிக்ஸ்டு வெஜ் பக்கோடா செய்வது !





மிக்ஸ்டு வெஜ் பக்கோடா செய்வது !

தேவையானவை:

நீளவாக்கில் நறுக்கிய காய்கறிகள்

கலவை (கேரட், பீன்ஸ், கோஸ், வெங்காயம், குடமிளகாய், உருளைக்கிழங்கு, பாலக்கீரை) - ஒரு கப்

புதினா, கொத்த மல்லித்தழை - தலா கால் கப்

கடலை மாவு - அரை கப்

அரிசி மாவு - கால் கப்

பச்சை மிளகாய் - 4 (நீளவாக்கில் நறுக்கவும்)

மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்

மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்

மல்லி (தனியா), ஓமம் - தலா கால் டீஸ்பூன் (சற்று நசுக்கவும்)

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:
மிக்ஸ்டு வெஜ் பக்கோடா

காய்கறிகளுடன் புதினா, கொத்த மல்லித்தழை, உப்பு சேர்த்து நன்றாகக் கலந்து 15 நிமிடங்கள் ஊற விடவும். 

அதனுடன் கடலை மாவு, அரிசி மாவு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், பச்சை மிளகாய், மல்லி - ஓமம் கலவை, ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்துப் பிசிறவும். 
அதனுடன் தண்ணீர் சிறிது சிறிதாகத் தெளித்துக் கெட்டியாகக் கலக்கவும். 

வாணலியில் எண்ணெயைக் காய விட்டு, பிசிறி வைத்த கலவையைச் சிறிது சிறிதாகக் கிள்ளிப் போட்டுப் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.
Tags: