பப்பாளிக்காய் வேர்க்கடலை பால் கூட்டு செய்வது?





பப்பாளிக்காய் வேர்க்கடலை பால் கூட்டு செய்வது?

தேவையான பொருட்கள்.:
பப்பாளிக்காய் - கால் கிலோ (பொடியாக நறுக்கவும்),

ஊறவைத்த வேர்க்கடலை - 150 கிராம்,

தேங்காய் - ஒரு மூடி,

பச்சை மிளகாய் - 6,

சீரகம் - ஒரு டீஸ்பூன்,

சோம்பு - ஒரு டீஸ்பூன்,

மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்,

உப்பு - தேவைக்கேற்ப.

தாளிக்க.:

கடுகு - அரை டீஸ்பூன்,

பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன்,

காய்ந்த மிளகாய் - 2,

கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு,

தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன்,

செய்முறை.:
பப்பாளிக்காய் வேர்க்கடலை பால் கூட்டு
தேங்காய், பச்சை மிளகாய், சீரகம், சோம்பு ஆகிய வற்றை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

குக்கரில் வேர்க்கடலை, நறுக்கிய பப்பாளிக்காய், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு இரண்டு விசில் வரும் வரை வேக விடவும்.
குங்குமப்பூ பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள் !
பின்பு அதில் அரைத்த விழுதைச் சேர்த்து ஒரு கொதி விட்டு, தாளிக்கக் கொடுத்ததைத் தாளித்து இறக்கினால், சுவையான பப்பாளிக்காய் வேர்க்கடலை பால் கூட்டு தயார். 

இது கலந்த சாத்துக்கும் சப்பாத்திக்கும் தொட்டுக் கொள்ள சுவையாக இருக்கும்.
Tags: