ருசியான கருப்பட்டி கேரட் பால் செய்வது எப்படி?





ருசியான கருப்பட்டி கேரட் பால் செய்வது எப்படி?

கருப்பட்டி என்றதும் அனைவரும் நாக்கை சப்பு கொட்டவே செய்வர். கருப்பட்டியின் சுவை அப்படி. இனிப்பு சுவைக்கு இன்று சர்க்கரை பயன்படுத்தி வருகிறோம். 
ருசியான கருப்பட்டி கேரட் பால் செய்வது எப்படி?
முன்பெல்லாம் கருப்பட்டி தான் இனிப்புக்கென பயன்படுத்தி வந்துள்ளனர். 
சீனி என்ற வெள்ளை சர்க்கரை கண்டறிந்து பலபகுதிகள் பயன்படுத்திய போதும் கிராமப்புறங்களில் பெரும்பாலும் கருப்பட்டி காபிதான் குடிப்பார்கள். 

மேலுக்கு சுகமில்லாத போது கொஞ்சம் கருப்பட்டியை தட்டி போட்டு காபி தூள் கொஞ்சம் போட்டு கொதிக்க வைத்து குடித்தால் மேல் வலி எல்லாம் குறைஞ்சு சுறுசுறுப்பாகி விடுவர். 

அந்தளவிற்கு கிராமத்து பகுதிகளில் கருப்பட்டி உபயோகம் பெரும்பாலும் காபி போடத்தான் பயன்பட்டது. 

அது போல் சில பகுதிகளில் இனிப்பு பலகாரங்கள் செய்ய கருப்பட்டி மட்டுமே பயன்படுத்துபவர்களும் உள்ளனர்.
அந்த கருப்பட்டியை பயன்படுத்தி குழந்தைகளுக்கு ஆரோக்கியமான கருப்பட்டி கேரட் பால் செய்வது எப்படி? தினமும் ஒரு கேரட்டை சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது. 

இன்று குழந்தைகளுக்கு சத்து நிறைந்த கருப்பட்டி கேரட் பால் செய்வது எப்படி? என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

துருவிய கேரட் - 1 கப்,

கருப்பட்டி - 3 டீஸ்பூன்,

இஞ்சிச்சாறு - 1/2 டீஸ்பூன்,

ஏலக்காய்த்தூள் - சிறிது,

பால் - 250 மி.லி.

செய்முறை :

பாலை நன்றாக கொதிக்க வைத்து ஆற விடவும். மிக்சியில் துருவிய கேரட்டை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும். அரைத்த கேரட் ஜூஸை வடிகட்டி கொள்ளவும்.
ருசியான கருப்பட்டி கேரட் பால் செய்வது எப்படி?
வடிகட்டிய ஜூசில் கருப்பட்டி, இஞ்சிச் சாறு, ஏலக்காய்த் தூள், காய்ச்சி ஆற வைத்த பால் சேர்த்து நன்கு கலந்து கண்ணாடி டம்ளரில் ஊற்றி பரிமாறவும்.  சத்தான சுவையான கருப்பட்டி கேரட் பால் ரெடி.
குறிப்பு:

பீட்ரூட்டிலும் செய்யலாம். கூடுமானவரை அஸ்காவைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
Tags: