கோதுமை பிரட் முட்டை வெஜிடபிள் சாண்ட்விச் செய்வது?





கோதுமை பிரட் முட்டை வெஜிடபிள் சாண்ட்விச் செய்வது?

தேவையான பொருட்கள்
பிரவுன் பிரெட் - 8

முட்டை - 4

(சர்க்கரை நோய் உள்ளவர்கள் வெள்ளை கருவை மட்டும் எடுத்து கொள்ளலாம் )

வெங்காயம் - 1 பெரியது

மிளகு தூள் - 1 டீஸ்பூன்

குடை மிளகாய் - 1 சிறியது

வெள்ளரி - அரையளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை
கோதுமை பிரட் முட்டை வெஜிடபிள் சாண்ட்விச்
வெங்காயம், வெள்ளரிக்காய், குடை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். வாணலியில் இரண்டு டீ ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயத்தை போட்டு வதக்கவும். 
பின் உப்புத்தூள், மிளகு தூள் சேர்த்து வதக்கவும். இடையில் முட்டையை உடைத்து ஒரு கிண்ணத்தில் ஊற்றி நன்றாக கலக்கி கொள்ளவும் 

( முட்டை வெள்ளை கருவை தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும் )

வெங்காயம் வதங்கியதும் முட்டையை ஊற்றி கலந்து கிண்டவும். இறுதியில் பொடியாக நறுக்கிய குடை மிளகாய் மற்றும் வெள்ளரி கலந்து இறக்கவும்.

பிரவுன் பிரெட்டை ஓரத்தை வெட்டி விட்டு அதை முக்கோண வடிவில் வெட்டிக் கொள்ளவும்.
இரண்டு பிரெட் துண்டங்களுக்கு நடுவில் முட்டை கலவையை வைத்து sandwich மேக்கரில் டோஸ்ட் செய்து எடுத்து பரிமாறவும். சத்தான கோதுமை பிரெட் முட்டை வெஜிடபிள் சாண்ட்விச் ரெடி.
Tags: