பொதுவாக மஷ்ரூம்களை பல விதமாக சமைத்து உண்பார்கள். அதில் பெப்பர் மஷ்ரூம் கிரேவி ஒரு வகை. இவை நான், சப்பாத்தி, ஃப்ரைட் ரைஸ், ரசம் சாதம் மற்றும் ஒயிட் ரைஸ்ல் போட்டு சாப்பிடுவதற்கு மிகவும் உகந்தது. 
இதில் சேர்க்கும் மஷ்ரூம் ஐ பொடித் துண்டுகளாக வெட்டி செய்தாள் மாலை நேர சான்விச் stuffing ஆகவும் பயன்படுத்தலாம். 

இதனால் காலையில் டிபனுக்கு சைடிஸ் ஆக செய்யும் போதே மாலை நேர சிற்றுண்டிக்கு தேவையான அளவுக்கு செய்து விட்டாள் மாலை நேர சான்விச்சுக்கும் சுலபமாக இருக்கும்.
மஷ்ரூம்மில் பல சத்துக்கள் உண்டு குறிப்பாக பெரும்பாலும் மாமிசத்தில் மட்டும் கிடைக்கப்படும் விட்டமின் டி இதில் அதிகம் உண்டு. 

மஷ்ரூம்வோடு பெப்பர்ரையும் சேர்த்து செய்வதினால் இது உடம்பிற்கும் மிகவும் சத்தானது. மஷ்ரூம் வேகுவதற்கும் வெகு நேரம் எடுக்காததால் இவை செய்வதற்கும் மிக சுலபமானவை. 

இப்பொழுது கீழே பெப்பர் மஷ்ரூம் கிரேவி செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தையும் காண்போம்.
தேவையானவை.:
2 பாக்கெட் பட்டன் மஷ்ரூம்

2 பெரிய வெங்காயம்

1 தக்காளி

1 துண்டு இஞ்சி

3 பூண்டு பல்

மிளகாய் தூள் தேவையான அளவு

1 மேசைக்கரண்டி தனியாதூள்

1 மேசைக்கரண்டி மிளகு

1 மேசைக்கரண்டி சோம்பு

1 மேசைக்கரண்டி மஞ்சள் தூள்

எண்ணெய் தேவையான அளவு

உப்பு தேவையான அளவு

கருவேப்பிலை சிறிதளவு

செய்முறை.:
முதலில் மஷ்ரூம் ஐ ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் சிறிது அளவு எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாகக் கழுவிக் கொள்ளவும். 
(இவ்வாறு செய்தால் மஷ்ரூம் வெள்ளை நிறமாக மற்றும் சமைக்கும் வரை நிறம் மாறாமல் இருக்கும்.)

அடுத்து மஷ்ரூம், வெங்காயம், தக்காளி, மற்றும் இஞ்சி பூண்டு ஐ ஒரு மிக்சியில் போட்டு பேஸ்ட் ஆக தயார் செய்து வைத்துக் கொள்ளவும்.

இப்பொழுது ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் அரை மேசைக்கரண்டி சோம்பு மற்றும் ஒரு மேசைக்கரண்டி மிளகு சேர்த்து சோம்பு சிறிது நிறம் மாறும் அளவிற்கு வறுக்கவும். 

பின்பு அதை சிறுது நேரம் ஆற விட்டு ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு தூள் செய்து வைத்துக் கொள்ளவும்.

பின்னர் ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் 2 அல்லது 3 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் சேர்த்து எண்ணெய்யை காய விடவும்.

எண்ணெய் காய்ந்ததும் அரை மேஜைக்கரண்டி அளவு சோம்பு, நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை மற்றும் ஒரு பின்ச் அளவு உப்பையும் அதில் போட்டு வதக்கவும்.

வெங்காயம் சிறிது வதங்கியதும் அதில் அரைத்து வைத்துள்ள இஞ்சி பூண்டு பேஸ்ட்டை சேர்த்து அதன் பச்சை வாசம் போகும் அளவிற்கு வதக்கவும். பின்பு அதில் ஒரு மேஜைகரண்டி மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.

அடுத்து அதில் தேவையான அளவு மிளகாய்த்தூள், தனியாத்தூள், நறுக்கி வைத்துள்ள தக்காளி மற்றும் பட்டன் மஷ்ரூம் ஐ சேர்த்து நன்கு பிரட்டி பின்பு அதனுடன் தேவையான அளவு உப்பையும் சேர்த்து வேக விடவும்.
மஷ்ரூம் ஐ கிண்டிக் கொண்டே இருக்க வேண்டும். (தேவைப்பட்டால் மட்டுமே சிறுது அளவு தண்ணீர் தெளிக்கவும் ஏனென்றால் மஷ்ரூம் தண்ணீர் விடும் தன்மை கொண்டது.)

மஷ்ரூம் வெந்ததும் அரைத்து வைத்துள்ள சோம்பு மற்றும் மிளகு துளை இதனுடன் சேர்த்து நன்கு பிரட்டவும். 

பின்பு இறக்குவதற்கு ஒரு நிமிடத்திற்கு முன்பு சிறிதளவு கருவேப்பிலையை தூவி ஒரு கிளறு கிளறி அடுப்பில் இருந்து இறக்கி ஒரு தட்டில் வைத்து பரிமாறவும்.
இப்பொழுது உங்கள் சூடான சுவையான மற்றும் சத்தான பெப்பர் மஷ்ரூம் கிரேவி தயார். இதை உங்கள் வீட்டில் செய்து பார்த்து குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.