தேவையான பொருட்கள்.:
மிளகு – 2 டீஸ்பூன்,

மல்லி (தனியா) – ஒரு டீஸ்பூன்,

ரெடிமேட் ரசப்பொடி – ஒரு டீஸ்பூன்,

மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை,

தக்காளி – ஒன்று,

புளி – சிறிதளவு,

வெல்லம் அல்லது சர்க்கரை – சிறிதளவு,
நெய் – ஒரு டீஸ்பூன்,

பூண்டுப் பல் – 2,

கடுகு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, கொத்த மல்லித்தழை – சிறிதளவு,

எண்ணெய் – ஒரு டீஸ்பூன்,

உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை.:
மிளகு – மல்லி ரசம் செய்வது
நெய்யில் மிளகு, தனியாவை வறுத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும். புளியில் 2 கப் நீர் விட்டு புளிக்கரைசல் தயார் செய்யவும்.

கடாயில் புளிக்கரைசலை விட்டு உப்பு, பெருங்காயத்தூள், நசுக்கிய பூண்டுப் பல், நறுக்கிய தக்காளி சேர்த்து கொதிக்க விடவும்.

இப்போது மிளகு-தனியா பொடி, ரசப்பொடி, மஞ்சள் தூள் சேர்த்து கொதி வந்தவுடன் இறக்கி, வெல்லம் அல்லது சர்க்கரை சேர்க்கவும்.
எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து ரசத்தில் சேர்க்கவும். கொத்த மல்லித்தழை தூவி, ரசப் பாத்திரத்தை மூடவும்.

குறிப்பு.:

ரசத்தை அடுப்பிலிருந்து இறக்கிய உடனேயே மூடி விட்டால்… ரசத்தின் மணம், சுவை அப்படியே கிடைக்கும்.