பன்னீர் கோபி கோஃப்தா கறி செய்வது எப்படி?





பன்னீர் கோபி கோஃப்தா கறி செய்வது எப்படி?

ஒரு உன்னதமான பஞ்சாபி டிஷ். இது பெரும்பாலும் புலாவ், ரொட்டி அல்லது பராத்தா போன்ற உணவுடன் பரிமாறப்படுகிறது.
பன்னீர் கோபி கோஃப்தா கறி

தேவையான பொருட்கள்
காளிஃப்ளவர் – கால் கப் (முக்கால் வேக்காடு வேக வைத்தது)

உருளைக்கிழங்கு – கால் கப் (வேக வைத்தது)

மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்

மிளகாய் தூள் – ஒரு டீஸ்பூன்

மிளகு தூள் – அரை டீஸ்பூன்

கரம் மசாலா – அரை டீஸ்பூன்

உப்பு – தேவைகேற்ப

பன்னீர் – கால் கப் (பொடியாக நறுக்கியது)

மைதா மாவு – சிறிதளவு

க்ரேவி செய்ய:

எண்ணெய் – தேவையான அளவு

தக்காளி விழுது – அரை கப்

மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்

மிளகாய் தூள் – ஒன்றை டீஸ்பூன்

கரம் மசாலா – அரை டீஸ்பூன்

இஞ்சி, பூண்டு விழுது – அரை டீஸ்பூன்

ப்ரெஷ் க்ரீம் – இரண்டு டீஸ்பூன்

பால் – அரை டம்ளர் (காய்ச்சிய பால்)

கொத்தமல்லி – சிறிதளவு
செய்முறை

ஒரு கிண்ணத்தில் வேக வைத்த காளிஃபிளவர், வேக வைத்த உருளைக்கிழங்கு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, மிளகு தூள், உப்பு சிறிதளவு ஆகிய வற்றை சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.
பிறகு, அதில் பன்னீர் துண்டு சேர்த்து கலந்து கொள்ளவும்.

சிறு சிறு உருண்டை களாக உருட்டி, மைதா மாவில் புரட்டி, கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து கொள்ளவும்.

இன்னொரு கடாயில் எண்ணெய் மூன்று டீஸ்பூன் ஊற்றி காய்ந்ததும், தக்காளி விழுது, இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து கலந்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி, க்ரீம் சேர்த்து கலந்து, 
இரண்டு நிமிடம் கழித்து பால் சேர்த்து கொதிக்க விட்டு க்ரேவி போல் வந்தவுடன் பொரித்த உருண்டை சேர்த்து மூன்று நிமிடம் கழித்து கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
Tags: