மல்டி பருப்பு பொடி செய்வது எப்படி?





மல்டி பருப்பு பொடி செய்வது எப்படி?

தேவையானவை:

துவரம் பருப்பு - ஒரு கப்,

உளுத்தம் பருப்பு, பாசிப்பருப்பு, கடலை பருப்பு, கொள்ளு - தலா 4 டேபிள் ஸ்பூன்,

மிளகு - 10,

காய்ந்த மிளகாய் - 4,

பெருங்காயத்தூள், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
மல்டி பருப்பு பொடி
பெருங்காயத்தூள், உப்பு தவிர, கொடுத்துள்ள எல்லா பொருட்களையும் தனித்தனியாக வெறும் கடாயில் பொன்னிறத்தில் வறுத்துக் கொள்ளவும். 

எல்லா வற்றையும் ஒன்றாக்கி ஈரமில்லாத மிக்ஸியில் அரைத்து, பெருங்காயத் தூள், உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். பிறகு, ஈரமற்ற, காற்றுப்புகாத சுத்தமான டப்பாவில் சேமித்து வைக்கவும்.
சூடான சாதத்தில், இந்தப் பொடியுடன் நெய் அல்லது எண்ணெய் விட்டுப் பிசைந்து சாப்பிடலாம். சாம்பார், குழம்பு வைக்க முடியாத அவசர காலங்களில் கை கொடுக்கும் இந்த மல்டி பருப்புப் பொடி.
Tags: