ருசியான மொகல் சிக்கன் செய்வது எப்படி?





ருசியான மொகல் சிக்கன் செய்வது எப்படி?

கோழிக்கறியில் செரோடோனின் (Serotonin) ஹார்மோன் உற்பத்திக்கு உதவும் டிரிப்டோபான் (Tryptophan) உள்ளது. இந்த செரோடோனின் ஹார்மோன் உடலின் புத்துணர்ச்சிக்கு உதவும் ஹார்மோன் ஆகும். 
ருசியான மொகல் சிக்கன்
இதனால், உடல் சோர்வு நீங்கி உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும். இரத்த சோகை, இரும்புச்சத்து குறைப்பாடு உள்ளவர்கள் அடிக்கடி உடல் சோர்வு பிரச்சனையை சந்திப்பார்கள். 

அடிக்கடி சிக்கன் உட்கொள்வது உடலுக்கு தேவையான இரும்புச்சத்தை அளிக்கிறது. அத்துடன், உடல் சோர்வை நீக்கி நிம்மதியான உறக்கத்திற்கு வழிவகுக்கிறது. 

சிக்கன் துண்டுகளை எண்ணெய் சேர்க்காமல் அவித்து சாப்பிடுவது, தேவையற்ற LDL கொழுப்பை குறைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். 

எண்ணெயில் பொரித்து, வறுத்து சாப்பிடுவது இதய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.மொகல் சிக்கன் மிகவும் சுவையாக இருக்கும். இதை இப்போது எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :
சிக்கன் – அரை கிலோ

பட்டர் – 50 கிராம்

ஏலம், பட்டை, கிராம்பு – 4 துண்டுகள் வீதம்

பாதாம் துருவியது – 3 டீஸ்பூன்

உலர்ந்த திராட்சை – 3 டீஸ்பூன்

தயிர் – 100 கிராம்

சீரக பொடி – 1 டீஸ்பூன்

மிளகுப் பொடி – 2 டீஸ்பூன்

சமையல் எண்ணெய் – தேவைக்கு

எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

கொத்தமல்லி தழை – சிறிதளவு
செய்முறை :

கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். சிக்கனை சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக் நன்றாக கழுவி அத்துடன் 1 ஸ்பூன் மிளகுத் தூள், உப்பு சேர்த்து பிசிறி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
ஒரு வாணலியில் எண்ணெயையும், பட்டரையும் சேர்த்து மிதமான தீயில் சூடாக்கவும்.

பட்டர் உருகியதும் ஏலம், பட்டை, கிராம்பு போட்டு சிவந்ததும் அதில் புரட்டி வைத்துள்ள சிக்கனைப் பரவலாகப் போட்டு இருபுறமும் பொன்னிறமாக பொறிய விட்டு ஒரு பாத்திரத்தில் எடுத்து கொள்ளவும்.

மீதமுள்ள எண்ணெயை வாணலியில் ஊற்றி அதில் பாதாம் துருவல், உலர்ந்த திராட்சை முதலிய வற்றைப் போட்டு பொரித்து அதை சிக்கன் மீது தூவி வைக்கவும்.
ஒரு கிண்ணத்தில் தயிரை எடுத்து, அதில் மீதமுள்ள மிளகுப் பொடி, சீரகப் பொடி, உப்பு சேர்த்து அடித்துக் கலந்து

பொரித்து வைத்துள்ள சிக்கன் மீது ஊற்றி பாத்திரத்தை அடுப்பில் வைத்து மீதமான தீயில் சிக்கனை வேகவிடவும். சிக்கன் நன்கு வெந்து நீர் சுண்டியதும் இறக்கி கொத்தமல்லி, எலுமிச்சை சாறு தெளித்துக் கிளறி பரிமாறவும்.
Tags: