தேவையான பொருட்கள்:

சோளம் - 2

உருளை கிழங்கு (வேக வைத்து மசித்தது) - 1 கப்

பன்னீர் (துருவியது) - 1/2 கப்

நறுக்கிய முட்டைக்கோஸ் - 1/2 கப்

இஞ்சி (பொடியாக நறுக்கியது) - சிறிது

கொத்தமல்லி - தேவைகேற்ப

மிளகாய் தூள் - 1 ஸ்பூன்

மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
தனியா தூள் - 1/2 ஸ்பூன்

சீரக தூள் - 1/2 ஸ்பூன்

சோள மாவு - 2 ஸ்பூன்

உப்பு, எண்ணெய் - தேவைகேற்ப

செய்முறை:
கார்ன் கபாப்

சோளத்தை வேக வைத்து மசித்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் வேக வைத்த உருளை கிழங்கு, துருவிய பன்னீர், சோள மாவு, மசித்த சோளம் ஆகியவற்றை சேர்த்து கலக்கவும். 

இந்தக் கலவையுடன், பொடியாக நறுக்கிய முட்டைகோஸ் (தேவைப்பட்டால் கேரட்டையும் துருவி சேர்த்துக் கொள்ளலாம்) பொடியாக நறுக்கிய இஞ்சி, 
மிளகாய் தூள், மஞ்சள் தூள், தனியா தூள், சீராக தூள், கொத்தமல்லி, உப்பு சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் நன்றாக கிளற வேண்டும். 

கலவை கெட்டியாக இருக்க வேண்டும். கட்லெட் தட்டுவதற்கு ஏற்ற பதத்தில் இல்லை யென்றால் மட்டும் சிறிது தண்ணீர் தெளித்துக் கொள்ளலாம். 

இந்த கலவையை கட்லெட்டுகளாக தட்டி எண்ணெய்யில் பொரித்தெடுக்கவும். தோசைக் கல்லிலும் பொரித்துக் கொள்ளலாம்