பட்டர் - புதினா - வெஜிடபிள் சாண்ட்விச் செய்வது எப்படி?





பட்டர் - புதினா - வெஜிடபிள் சாண்ட்விச் செய்வது எப்படி?

 தேவையானவை:
பிரெட் - ஒரு பாக்கெட்,

வெண்ணெய் - 100 கிராம், 

ஆய்ந்து, அலசிய புதினா - ஒரு கப்,

கேரட் துருவல் - ஒரு கப்,

பச்சை மிளகாய் - ஒன்று,

நறுக்கிய தக்காளி, நறுக்கிய வெங்காயம் - தலா ஒரு கப்,

உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
பட்டர் - புதினா - வெஜிடபிள் சாண்ட்விச்
ஆய்ந்த புதினா, பச்சை மிளகாய், உப்பு மூன்றையும் மிக்ஸியில் போட்டு நைஸாக அரைக்கவும்.

ஒரு பிரெட் ஸ்லைஸ் மீது, புதினா பேஸ்ட் மற்றும் வெண்ணெயைத் தடவவும். 
பிறகு, நறுக்கிய வெங்காயம், தக்காளி, கேரட் துருவலை அதன் மீது பரவலாகத் தூவி, இன்னொரு பிரெட் ஸ்லைஸ் வைத்து மூடவும்.

இதேபோல், தேவைப்படும் அளவுக்கு தயார் செய்யவும். தயார் செய்த பிரெட்களை டோஸ்டரில், டோஸ்ட் செய்து பரிமாறவும். அல்லது தவாவில் டோஸ்ட் செய்தும் பரிமாறலாம்.
Tags: