பேப்பர் ரோஸ்ட் செய்வது எப்படி?





பேப்பர் ரோஸ்ட் செய்வது எப்படி?

தேவையானவை:

அரிசி – 3 கப்,

உளுத்தம் பருப்பு – ஒரு கப்,

சாதம் – ஒரு கப்,

எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
பேப்பர் ரோஸ்ட் செய்வது
அரிசி, உளுத்தம் பருப்பை தனித்தனியாக ஊற வைத்து நைஸாக அரைத்து எடுத்து ஒன்றாகக் கலக்கவும். 
இதனுடன் சாதத்தைக் கலக்கவும் (சாதத்தை… ஊற வைத்த அரிசி, உளுந்துடன் சேர்த்தும் அரைக்கலாம்). தேவையான அளவு உப்பு கலந்து முதல் நாள் தயார் செய்து விடவும்.

மறுநாள் தோசைக் கல்லில் எண்ணெய் தடவி, மாவை எடுத்து கல்லில் 2 கரண்டி அளவு விட்டு… வட்டமாக, மெல்லியதாக தேய்க்கவும். 

சுற்றிலும் எண்ணெய் விடவும். முறுவலாக வந்ததும் எடுக்கவும்.

குறிப்பு:
தேங்காய் சட்னி, புதினா சட்னி, தக்காளி சட்னி ஆகியவை இதற்கு ஏற்ற சைட் டிஷ்.
Tags: