தேவையானவை:
பாசுமதி அரிசி - அரை கிலோ,

கேரட் துருவல், பச்சைப் பட்டாணி (தோல் உரித்தது) - தலா ஒரு கப்,

வெங்காயம், குடமிளகாய் - தலா ஒன்று,

பீன்ஸ் - 10,

பச்சை மிளகாய் - 3,

புதினா, கொத்தமல்லி - சிறிதளவு,

நெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
கிரீன் வெஜிடபிள் ரைஸ் செய்வது
குக்கரில் ஒரு பங்கு பாசுமதி அரிசிக்கு, இரு பங்கு தண்ணீர் விட்டு இரண்டு விசில் வந்ததும் இறக்கவும்.

குடமிளகாயை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். பீன்ஸை பொடியாக நறுக்கவும்.
கடாயில், நெய் விட்டு நறுக்கிய வெங்காயம், கீறிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பிறகு, கேரட் துருவல், நறுக்கிய குடமிளகாய், நறுக்கிய பீன்ஸ், பட்டாணி, உப்பு சேர்த்து மிதமான தீயில் வதக்கவும்.

காய்கள் சரியான பதத்தில் வெந்ததும், புதினா சேர்த்து கலந்து இறக்கவும். அதில், சாதம் போட்டுக் கலந்து, கொத்தமல்லி தூவி பரிமாறவும். இதற்கு, தயிர் பச்சடி சூப்பர் சைட் டிஷ்.