நெல்லிக்காய் தயிர் பச்சடி செய்வது எப்படி?

நெல்லிக்காய் தயிர் பச்சடி செய்வது எப்படி?

தேவையான பொருட்கள் :
பெரிய நெல்லிக்காய் - 12,

தேங்காய் - 1 துண்டு,

பச்சைமிளகாய் - 3,

புளிப்பில்லாத கெட்டித்தயிர் - 1 கப்,

பெருங்காயத்தூள் - சிறிது.

தாளிக்க...

கடுகு, உளுத்தம் பருப்பு - தலா 1 டீஸ்பூன்,

கறிவேப்பிலை - சிறிது,

எண்ணெய் - 1 ஸ்பூன்.
செய்முறை :
நெல்லிக்காய் தயிர் பச்சடி
நெல்லிக்காயை கொட்டையை நீக்கி மிக்சியில் கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும். தேங்காய், பச்சை மிளகாயை நைசாக அரைத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் அரைத்த விழுது, உப்பு, பெருங்காயத்தூள், தயிர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். 
கடாயை அடுப்பில் வைத்து 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுத்த பொருட்களை போட்டு தாளித்து 

தயிர் கலவையில் கொட்டி கலந்து பரிமாறவும். சூப்பரான சத்தான நெல்லிக்காய் தயிர் பச்சடி ரெடி.
Tags: